#BREAKING: ஹிஜாப் மீதான தடை செல்லும் – கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

#BREAKING: ஹிஜாப் மீதான தடை செல்லும் – கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தப் பட்டது.

இந்த தடையை எதிர்த்து மாநிலம் முழுவதும் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தனர். இந்நிலையில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதர்குப் போட்டியாக சில இந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு காவித்துண்டு அணிந்து வந்து எதிர் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், முஸ்லிம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு விசாரணை முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

ஹிஜாப் தடை தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  அமர்வு உத்தரவிட்டதாவது:

ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல. ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அவசியம் கிடையாது. ஆகவே கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும்.

-இவ்வாறு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது.  இன்று ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு கர்நாடகாவில் பல மாவட்டங்களில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com