45வது புத்தகக்கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம்!

45வது புத்தகக்கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம்!
இன்று முதல் மார்ச் 6ம் தேதி வரை சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 45 – வது புத்தகக்கண்காட்சி இன்று தொடங்கப்பட உள்ளது. முதல் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு கண்காட்சியை துவக்கி வைப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கப்பட்ட தகவல்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 45 – வது புத்தகக் கண்காட்சி இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட உள்ளது. மார்ச் 6-ம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 800 அரங்குகளில் 500 பதிப்பகங்கள் இந்த புத்தகக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக, 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் புத்தகக் கண்காட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
– இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com