#Breaking: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி வீடு: வருமான வரித்துறை ரெய்டு!

#Breaking: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி வீடு: வருமான வரித்துறை ரெய்டு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணன் வீடு மற்றும் அவருக்கு  தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணன் மீது பங்குச் சந்தை முறைகேடு தொடர்பான புகார் எழுந்த நிலையில் இன்று அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய பங்குச்சந்தை தலைமை அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணன் இருந்தபோது, இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியார் ஒருவரிடம் ஆலோசித்து பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்ததாகவும் மேலும்,ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை விதிகளை மீறி தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமித்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சித்ரா ராமகிருஷ்ணன் மீதான இந்த புகார்களை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரித்து வருகிறது.

இந்நிலையில்,சென்னை அண்ணா சாலையில் உள்ள NSE அலுவலகம் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com