தீபாவளி வாழ்த்துகள்!

Diwali greetings and wishes
Diwali greetings and wishes
Published on
Deepavali Strip 2024
  • தீபங்களின் ஒளி உங்கள் வாழ்வில் சகல வளங்களும் சேர்க்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  • மத்தாப்பு போல் மகிழ்ச்சி பொங்க, தீபத்திருவிழா தீபாவளியில், வான்வெளி வரைக்கும் உற்சாகம் பொங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  • தீபாவளி வெளிச்சம் உங்கள் வாழ்வில் எப்போதும் ஜொலிக்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  • இந்த தீபாவளி, குடும்பத்துடன் இணைந்து, நல்ல நினைவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  • தீபங்களின் ஒளி உங்கள் வாழ்வில் அன்பையும் ஒற்றுமையையும் பரப்பட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  • இந்த தீபாவளி, உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கத்திற்கான ஒரு வாய்ப்பாக அமையட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Diwali greetings and wishes
Diwali greetings and wishes
  • மகிழ் ஒளியால் உங்கள் முகம் மற்றும் உள்ளம் பிரகாசிக்க... தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

  • ஒளியாய் இருந்து மற்றவர்கள் இருளைப் போக்குங்கள்... தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  • மழை வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கும் சிறுவர்களுக்கும்... எந்த படத்திற்கு போகலாம் என்ற குழப்பத்தில் இருக்கும் ஆண்களுக்கும்... யார் வீட்டு பலகாரம் நன்றாக இருக்கிறது என்று மதிப்பீட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் மனம் நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Diwali greetings and wishes
Diwali greetings and wishes
  • மனதில் மகிழ்ச்சி வெளிச்சம் பரவ

    முகத்தில் புன்னகைப் பூக்கள் பூக்க

    அகத்தில் அன்பு என்றும் தங்கிட

    ஆனந்த தீபாவளி நல்வாழ்த்துகள்...

  • இன்று மட்டுமல்ல என்றென்றும் நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும்

    மகிழ்ச்சி மத்தாப்புகள் ஒளிர

    மனமகிழ் தீபாவளி நல்வாழ்த்துகள்...

  • வெளிச்சம் எங்கும் பரவட்டும்

    மகிழ்ச்சி என்றும் தங்கட்டும்

    இனிய தீபாவளி வாழ்த்துகள்...

  • பெருகட்டும் மகிழ்ச்சி

    செழிக்கட்டும் செல்வம்

    சிறக்கட்டும் ஆரோக்கியம்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.. .

  • நான் எனும் அகங்காரம் அழிந்து

    நன்மைகளுடன் எந்நாளும்

    இறை அருள் பெற்று இன்புற

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  • இயன்ற வரை ஈகோ ஒழித்து

    இயலாதோரின் வறுமை நீக்கி

    இணைந்து இன்புற இனிய

    தீபாவளி வாழ்த்துகள்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com