கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்!

Christmas & New Year Wishes
Christmas & New Year Wishes
Published on

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (Christmas Wishes):

Christmas Wishes
Christmas Wishes
  • இன்றைய நாள் முதல் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உங்கள் வாழ்நாளில் பிரகாசமாய் கடவுளின் கிருபையால் அமைய இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.

  • கடவுள் உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றும் நாளாக உங்களுக்கு இன்று அமையட்டும். இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துகள்.

  • அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம் இன்று, நாமும் அன்பை விதைப்போம் அன்பால் உலகை ஆள்வோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

  • இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியையும், உள்ளத்தில் அமைதியையும் கொண்டு வரட்டும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

  • விண்ணில் மின்னும் நட்சத்திரம் போல உங்கள் வாழ்வும் பிரகாசிக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

  • உலகம் முழுவதும் அன்பும் அமைதியும் பரவட்டும். இந்த கிறிஸ்துமஸ் உங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்லட்டும். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

  • கடந்த கால கவலைகளை மறந்து, புதிய நம்பிக்கையுடன் இந்த கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

  • சாண்டா கிளாஸ் உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் ஒரு கிறிஸ்துமஸாக இது அமையட்டும்! இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

  • மகிழ்ச்சி என்னும் மலர்கள் உங்கள் வீட்டில் பூத்துக் குலுங்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

  • கிறிஸ்துமஸ் மணிகளின் ஓசையை விட, உங்கள் வீட்டுச் சிரிப்பொலி சத்தமாக ஒலிக்கட்டும்! இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

இதையும் படியுங்கள்:
கிறிஸ்துமஸ் கேக் பிறந்த கதை!
Christmas & New Year Wishes

புத்தாண்டு வாழ்த்துகள் (New Year Wishes):

New Year Wishes
New Year Wishes
  • பிறக்கும் புதுவருடம் எல்லா மக்களுக்கும் அன்பையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

  • நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

  • 2026-ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் புதிய வெற்றிகளையும் சாதனைகளையும் தரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  • நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று, 2026-ல் நீங்கள் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகள்.

  • பழைய கவலைகளைப் பின்னுக்குத் தள்ளி, புதிய லட்சியங்களுடன் 2026-ஐ வரவேற்போம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  • உங்கள் உழைப்பிற்கு ஏற்ற உயர்வு இந்த 2026-ல் உங்களுக்குக் கிடைக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  • குழப்பங்கள் நீங்கி, மன நிம்மதியும் அமைதியும் தரும் ஆண்டாக 2026 அமையட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  • முடிந்து போனவை உரங்களாகட்டும்... மலரப்போகும் புத்தாண்டு உங்களின் வெற்றிக் காடாகட்டும்! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  • காலம் எனும் காகிதத்தில், வெற்றி எனும் கவிதையை எழுதக் காத்திருக்கிறது இந்தப் புத்தாண்டு! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  • இந்த புத்தாண்டில் தோல்விகளுக்கு 'Unsubscribe' செய்வோம்... மகிழ்ச்சியை 'Install' செய்வோம்! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com