ஹிஜாப் வழக்கை விசாரித்த நீதிபதிக்கு எதிராக ட்வீட்: கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது!

ஹிஜாப் வழக்கை விசாரித்த நீதிபதிக்கு எதிராக ட்வீட்: கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது!

Published on

கர்நாடகாவில் ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஆட்சேபகரமான ட்வீட் செய்ததற்காக கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்தியப் பிரிவு காவல் துணை ஆணையர் எம்.என்.அனுசேத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

கன்னட திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான சேத்தன் அஹிம்சா, ஹிஜாப் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சர்ச்சைக்குரிய ட்வீட் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஷேஷாத்ரிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவர் மீது ஐபிசியின் 505(2) மற்றும் 504 ஆகிய பிரிவுகளின்கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா, ஹிஜாப் சர்ச்சை குறித்து விமர்சித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துவந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு பெங்களுருவில் நடைபெற்ற அம்பேத்கர் ஆதரவு அமைப்புகள் நடத்திய பேரணி குறித்தும் தொடர்ச்சியாக பல ட்வீட்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com