
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளிk குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவ்விபத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையிலிருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொண்ணாபுரம் பகுதியை நோக்கி விவேகம் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் வேன் வந்து கொண்டிருந்தபோது, திடீரென் வேன் சக்கரம் கழன்று ஓடியது. இதில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம், பெற்றோர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள வாகனங்களை சோதனை நடத்தி தரச் சான்றிதழ் வழங்கிய பின்பு பயன்படுத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.