உக்ரைனில் மக்களுக்கு உதவும் ஹரே ராமா இயக்கம்; இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் பலர் தஞ்சம்!

உக்ரைனில் மக்களுக்கு உதவும் ஹரே ராமா இயக்கம்; இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் பலர் தஞ்சம்!
Published on

உக்ரைனில் போர் தாக்குதலால் சிக்கிய மக்களுக்கு அங்குள்ள ஹரே ராமா இஸ்கான் கோயில் உணவு, உறைவிடம் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது.

இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயில் துணைத்தலைவர் ராதாராமன் தாஸ் கூறியதாவது;

உக்ரைனில் 54 இஸ்கான் கோயில்கள் உள்ளன.  இவற்றின் கதவுகள் போரில் பாதிக்கபட்ட மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன.

ஆபத்தில் சிக்கியுள்ள மக்கள் எந்த நேரத்திலும் கோயில் வளாகத்துக்குச் சென்று உதவியைப் பெறலாம்.அங்கு உதவி செய்யபக்தர்களும், கோயில் ஊழியர்களும் காத்திருக்கின்றனர்..

கீவ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள இஸ்கான் கோயில் வளாகங்களில் ஏராளமான பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. செசன்யா போரின்போதுகூட இஸ்கான் கோயில் நிர்வாகங்கள் மக்களுக்கு உதவின.

இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com