4 பந்தில் 4 விக்கெட்: சாதனை படைத்தார் மேற்கிந்திய அணி வீரர் ஜேசன் ஹோல்டர்!

4 பந்தில் 4 விக்கெட்: சாதனை படைத்தார் மேற்கிந்திய அணி வீரர் ஜேசன் ஹோல்டர்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டரின் அபார பந்து வீச்சுதான் காரணம்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான ஜேசன்ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட்களை வீழ்த்திஅபார சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியின் 20-வது ஓவரின் போது தனது அபார பந்து வீச்சின் மூலம் ஜேசன் ஹோல்டர் 2-வதுபந்தில்கிறிஸ்ஜோர்டன், 3-வதுபந்தில்சாம்பில்லிங்ஸ், 4-வதுபந்தில்அடில்ரஷித், 5-வதுபந்தில்சஹிப்மஹ்மத்ஆகிய இங்கிலாந்து வீரரகளை அவுட் ஆக்கினார்.

இதன் மூலம் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் உலகளவில் 4-வது வீரர் என்ற சாதனையை ஜேசன் ஹோல்டர் படைத்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com