50-க்கும் மேற்பட்ட டால்பின்கள்; கன்னியாகுமரி அருகே கடற்கரையில் கரை ஒதுங்கி பரபரப்பு!

50-க்கும் மேற்பட்ட டால்பின்கள்; கன்னியாகுமரி அருகே கடற்கரையில் கரை ஒதுங்கி பரபரப்பு!
Updated on

கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் திடீரென 100க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கி, உயிருக்கு போராடுவதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு போலீசார், மீனவர்களுடன் இணைந்து, டால்பின்களை மீட்டு மீண்டும் கடலுக்குள் அனுப்பினர். இந்நிலையில் ஒரு டால்பின் மட்டும் உயிரிழந்தது.

இயற்கைக்கு மாறான கடல் போக்கு காரணமாக கன்னியாகுமரியில் மேற்கு கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது இதுபோன்று டால்பின்கள் கரை ஒதுங்குவது வழக்கம் என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com