
சென்னையை அடுத்த நாவலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் முனுசாமி சுப்பிரமணியன் 64 வயதான இவர் கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து, இன்று மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத அதிகபட்ச வயது நிர்ணயம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் 17 வயது நிரம்பிய எவரும் நீட் தேர்வை எழுதலாம் என்று உச்சநீதிம்ன்றம் அறிவித்தது. இந்த நிலையில் சென்னையை அடுத்த நாவலூர் என்ற பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியர் முனுசாமி சுப்பிரமணியன் நீட் தேர்வு எழுதி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் முன்பு அரசுப் பள்ளியில் படித்தவர் என்பதால், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ள்லி மானண்வர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் இன்று கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.