7 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

7 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

Published on

தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களீல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (நவம்பர் 9) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் அடுத்த இரண்டு வாரங்களில் தெற்கு மற்றும் உள் தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் உடபட் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

-இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com