4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பத்திரிகை!

மே 3, உலக பத்திரிகை சுதந்திர தினம்
La Bougie du Sapeur
La Bougie du Sapeurhttps://www.rfi.fr
Published on

லகில் தினசரி, வாராந்திர, மாதாந்திர செய்தித்தாள்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளிவரும் ஒரு பத்திரிகை உண்டென்றால் நம்ப முடிகிறதா? பிரான்ஸ் நாட்டில், 'லா பூகி டு சபெர்' (La Bougie du Sapeur) என்றொரு பத்திரிகை கடந்த 1980ம் ஆண்டு முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் வருடத்தின் பிப்ரவரி 29ம் தேதி அன்றுதான் வெளியாகிறது!

‘லா பூகி டு சபெர்’ என்பது 1980ல் தொடங்கப்பட்ட ஒரு பிரெஞ்சு நையாண்டி பத்திரிகை ஆகும். படங்களும், சிறு கட்டுரைகளையும் கொண்டது. 20 பக்கங்கள் கொண்ட சிறு பத்திரிகை. இது லீப் டே அன்று 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியிடப்படுகிறது. இது உலகின் மிகக் குறைவாக அச்சிட்டு வெளியிடப்படும் செய்தித்தாள் ஆகும். லா பூகி டு சபெர் பத்திரிகையின் தற்போதைய ஆசிரியராக இருப்பவர் ஜீன் டி இண்டி. நகைச்சுவை எழுத்தில் தேர்ந்த இவர், 1992ம் ஆண்டு முதல் இந்த பத்திரிகையின் ஓர் அங்கமாக இருக்கிறார்.

1980ல் ஜாக் டெபூசன் மற்றும் கிறிஸ்டியன் பெய்லி என்கிற இரு நண்பர்கள், தங்களுக்குள் விளையாட்டாக தொடங்கியதுதான், 'லா பூகி டு சபெர்' செய்தித்தாள். இந்த வித்தியாசமான முயற்சி இத்தனை காலம் தொடரும் என்று அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். 2024 பிப்ரவரி 29ம் தேதியுடன் இந்தப் பத்திரிகை தனது 12வது இதழைக் கொண்டாடியது.

பிரெஞ்சு மொழியில், 'லா பூகி டு சபெர்’ (La Bougie du Sapeur) என்ற தலைப்பு, 'சப்பரின் மெழுகுவர்த்தி' என்று பொருள்படும். 'சப்பர்' என்பது பொறியியல் படையின் ஒரு அங்கத்தினரைக் குறிக்கிறது. 1896ல் ஜார்ஜஸ் கொலோம்ப் என்பவர் உருவாக்கிய கேலிச் சித்திரக் கதாபாத்திரமான கேமம்பர், ஒரு 'சப்பர்' ஆவார். அந்தக் கதாபாத்திரம் பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மற்றும் நான்கு முறை மட்டுமே பிறந்த நாள் கொண்டாடியபோது ராணுவத்தில் சேர்ந்து விடுகிறார். இந்த கேலிச் சித்திரத்தையே தங்களது நாளிதழின் பெயராக வைத்துள்ளது இந்த வித்தியாசமான பத்திரிகைக் குழுமம். 1980 வெளியான முதல் பதிப்பு இரண்டே இரண்டு நாளில் விற்று தீர்ந்தது.

2024 வரை, 2,00,000 பிரதிகள் அச்சிடப்பட்டு செய்தி முகவர்கள் மற்றும் செய்தித்தாள் கடைகளில் விற்கப்பட்டன. விலை 2016ல் €4.70, 2024ல் €4.90. சந்தாக்கள் கிடைக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு €100 மற்றும் பின் வெளியீடுகள் €15 ஆகும். கட்டுரை ஆன்லைனில் வெளியிடப்படவில்லை. 2016 பதிப்பானது பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் கனடா மற்றும் பிரான்சில் முதன்முதலில் விற்கப்பட்டது. 2020ம் ஆண்டு கோவிட் சமயத்தில் வெளிவந்தது. அப்போது 1,20,000 பிரதிகள் விற்றது.

கட்டுரைகளுக்கு மேலாக, லா பூகி டு சப்பூரில் ‘தி ட்ரவுனிங் இன் தி பூல்’ என்ற தொடர்கதையும் வெளிவருகிறது. இந்த செய்தித்தாள் 20 பக்கங்கள் கொண்ட வழக்கமான செய்தித்தாளைப் போன்று அரசியல், விளையாட்டு, சர்வதேச செய்திகள், கலை, புதிர்கள் மற்றும் பிரபலங்களின் வதந்திகள் பற்றிய பிரிவுகளுடன் நகைச்சுவை, குறுக்கெழுத்து போட்டி, புதிர் அதில் இடம்பெற்றிருக்கும்.

புதிர் மற்றும் குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கான பதில் 4 ஆண்டுக்குப் பின் வெளியிடப்படும். இதழில் இடம் பெற்றிருக்கும். 2004ம் ஆண்டில், செய்தித்தாளின் சிறப்பு ஞாயிறு பதிப்பு வெளியிடப்பட்டது. 20 பக்கங்கள் கொண்ட இந்த செய்தித்தாளின் விலை இந்திய மதிப்பில் 440 ரூபாய் ஆகும்.

2024 பதிப்பின் முதன் தலைப்பானது, ‘நாம் அனைவரும் அறிவாளிகளாக இருப்போம்’ என்ற தலைப்பில் செயற்கை நுண்ணறிவு பற்றிய வர்ணனையாகும்; இரண்டாவது தலைப்பு, ‘பெண்களாக மாறுவதற்கு முன் ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை’ என்ற தலைப்பில் பாலின மாற்றம் தொடர்பான பிரச்னைகள் பற்றி வந்தது. பிரான்ஸ் நாட்டில் பள்ளிக்கூடங்கள் தேவையில்லை நன்றி செயற்கை நுண்ணறிவு. ஒலிம்பிக் சமயத்தில் பாரீஸ் நகரிலுள்ள ஈபிள் டவரை கழட்டி வைத்து விடலாம். இதனால் அதை பாதுகாப்பதில் எந்தவொரு பிரச்னையும் வராது என்று பல நகைச்சுவை கட்டுரைகள் இடம்பெற்றன.

இதையும் படியுங்கள்:
நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம்!
La Bougie du Sapeur

நகைச்சுவை நிரம்பிய செய்திகள் வித்தியாசமான வெளியீட்டு நாளுக்கு ஏற்ப, செய்திகளிலும் நகைச்சுவை கலந்தே இருக்கும். சமகால அரசியல் நிகழ்வுகள், உலக விவகாரங்கள் என அனைத்து விஷயங்களையும் கேலி, கிண்டல் தொனியில் எழுதுவது இந்தப் பத்திரிகையின் பாணி. இதற்கெனவே பிரெஞ்சு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விற்பனையில், இந்தப் பத்திரிகை லட்சக்கணக்கில் பிரதிகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. ஒரு நகைச்சுவைப் பத்திரிகைக்கு இத்தனை வரவேற்பு என்பது ஆச்சர்யமான உண்மைதான்.

லீப் வருடத்தின் பிப்ரவரி 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தால், 'லா பூகி டு சபெர் - ஞாயிறு' என்ற சிறப்பு ஞாயிறு இதழ் வெளியிடப்படுகிறது. அதேபோல, 'லா பூகி டு சபெர்-மேடம்' என்ற இணைப்பு இதழ் பெண்களை மையப்படுத்தி வெளியாகிறது. 2012ல் பெண்களுக்கான இணைப்பு, அதிரடியாக, 'லா பூகி டு சபெர் – கொக்யூன்' என்ற புதிய துணை இதழாக உருவெடுத்தது. இந்தப் பத்திரிகையின் விற்பனை வருமானம் உடல் ஊனமுற்றோர் நல நிதிக்காக வழங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com