இல்லத்தரசிகளைப் போற்றும் இனிய நன்னாள்!

நவம்பர் 03, தேசிய இல்லத்தரசிகள் தினம்
National Housewives Day
National Housewives Day
Published on

ன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்து தங்களுடைய இல்லத்தை கோயிலாக மாற்றும் இல்லத்தரசிகளுக்கான தினம் இன்று. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3ம் தேதி தேசிய இல்லத்தரசி தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளையும், வீட்டையும் நன்கு கவனித்துக்கொள்ளும் அம்மாக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இல்லத்தரசி தினம் முதலில் கொண்டாடப்பட்ட சரியான தேதி தெளிவாக இல்லை. ஆனால், கடின உழைப்புக்கு மதிப்பளிக்கப்படாத ஒரு இல்லத்தரசியால் இந்த நாள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த நாள் மற்ற விடுமுறை நாட்களைப் போல இன்னும் பிரபலமாகவில்லை என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் இல்லத்தரசிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று ஒரு நாள் சமைத்தல், வீட்டை சுத்தம் செய்தல், குழந்தைகளை பராமரித்தல் போன்ற அனைத்து வேலைகளையும் கணவரோ அல்லது பிள்ளைகளோ பொறுப்பேற்று இல்லத்தரசிகளுக்கு ஓய்வு கொடுப்பது சிறப்பாக இருக்கும்.

இல்லத்தரசி தினம் என்பது நம்முடைய அம்மாக்கள், மனைவியர் மற்றும் சகோதரிகள் என்று வீட்டின் முதுகெலும்பாக விளங்கும் அனைவரையும் நேசிக்கவும், மதிக்கவும், வீட்டை ஒரு இனிய இல்லமாக உணர வைக்கும் அவர்களின் அர்ப்பணிப்பிற்காக அவர்களைப் கௌரவிக்கவும் கொண்டாடவும் வேண்டும்.

குடும்பம் என்ற வண்டியின் அச்சாணியாகத் திகழும் இல்லத்தரசிகள் வீட்டு வேலை, வெளி வேலை என அனைத்தையும் அசால்ட்டாக செய்து சம்பளம் எதுவும் இல்லாமல் குடும்ப நலன் கருதி வீட்டில் உள்ளவர்களின் சந்தோஷத்திற்காக உழைக்கும் இல்லத்தரசிகளை பாராட்டத்தான் வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஆரஞ்சு விதைகள்!
National Housewives Day

வீடு என்பது வெறும் செங்கல், சிமெண்ட்டால் ஆனது அல்ல. அது இல்லம் என்னும் பெருமையை அடைவது வீட்டில் உள்ள இல்லத்தரசிகளால் மட்டுமே. அவர்களைக் கொண்டாடி பரிசளிப்பதை விட அவர்களின் பங்களிப்பை உணர்ந்து அவர்களுக்கு ஆதரவாகவும், அனுசரணையாகவும் வீட்டு வேலைகளில் உதவி செய்து அவர்களின் சுமைகளை குறைப்பதே சிறந்தது.

குழந்தைகளை வளர்ப்பது, வீட்டிலுள்ள முதியோரை பேணுவது, கணவருக்கும் உறவினர்களுக்கும் தேவையானதை செய்து கொடுப்பது, முக்கியமாக தினம் தினம் உணவு தயாரிப்பது என்று 24/7 வேலைகள் செய்து சகலகலாவல்லியாகத் திகழும் இல்லத்தரசிகளின் அர்ப்பணிப்பை போற்றுவதும் பாராட்டுவதும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com