தந்தையாய் நீ கிடைத்திட தவங்கள் பல புரிந்தேனோ! ஜூன் 16 - தந்தையர் தினம்!

Father's Day
Father's Day
1.

அப்பாவும் நானும்

தந்தையாய் நீ கிடைத்திட தவங்கள் பல புரிந்தேனோ!

அன்னை மடி வாசம் உணர்ந்திட  உன் மகளாய் பிறந்தேனோ! 

ஆறுதலாய் நீ இருக்க அறிவேனே இந்த அகிலத்தை!

ஆனந்தமாய் நீ சிரிக்க துடைப்பேனே உன் துயரத்தை! 

அனைத்து தந்தைகளுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.....

- சுடர்லெட்சுமி மாரியப்பன்,தென்காசி மாவட்டம், ஆய்க்குடி (கம்பளி)

2.

அப்பாவும் நானும்

தந்தை தந்தவை...

பள்ளிப்படிப்பும், பாடப்புத்தகமும், பகுத்தறிவும், பெற்ற பட்டதாரி பட்டமும்,

பொன்னும், பொருளும், புகழும்,  பண்டிகைகளில் புத்தாடையும்,

தங்கும் தரணியில் தன்னம்பிக்கையும், தைரியமும், தானே நான் பெறவில்லை 

தனித்து வாழ பழகிக்கொள் மகளே என்று தன்னலமற்ற என் தந்தை தந்தவை...

அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்...

R. சுவாதி

3.
என் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம். அப்பாவின் மடியில் நான்.

அப்பாவும் நானும்:-

சுயநலம் இல்லா உழைப்பாளி !
சுயமாய் செய்தொழிலில் வெற்றி !!
பெற்ற பிள்ளைகள்  அறுவரும் ,
பெருமையாய் வாழ்கிறோம் அவராலே !

என் அப்பாவை பற்றி:-

பெயர்- எம் சேஷாத்திரி. 

சொந்த ஊர்- கீழ்வேளூர்.

18 வயதில் தந்தையை இழந்தவர், 

பரம்பரை தொழிலான வைதீகத்தை விட்டு நெல் அரவை மில்லை சுயமாய்த் தொடங்கி, மேலும் பல சிறு சிறு தொழில்கள் செய்தார்.

நான்கு பெண்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். 

இரண்டு பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தார்.

அதிக உழைப்பினால் உடல்நிலை மோசமாகி நீரிழிவு நோய் வந்து தம் அறுபதாம் வயதிலேயே இயற்கை எய்தினார். 

- லலிதா பாலசுப்ரமணியன்

4.

அப்பாவும் நானும் 

மைதியின் மறு உருவம் 

னால் அன்பின் உச்சம் 

வையே குணம் என உணர்ந்ததால் 

டில்லா உங்கள் நினைவே என் சுவாசம்! 

- உஷாமுத்துராமன், திருநகர்  

5.

அப்பாவும் நானும் 

யிர் கொடுத்த உன்னதர் 

ற்சாகத்துடன் தைரியத்தையும் 

த்வேகத்துடன் போதித்து

ள்ளத்தில் அமர்ந்த மாமன்னர்.

- ராதிகா வைத்தியநாதன், மதுரை

6.

அப்பாவும் நானும் 

'உலகிலேயே அதிக

பாதுகாப்பு மிகுந்த  இடம்

தந்தையின்

கை மட்டுமே'

- S.Nalini Sundar 

7.

அப்பாவும் நானும் 

ஒன்றாய் சேர்ந்து பல களங்களில் வெற்றி கண்டதில்லை ஆனாலும் என்னை ஓ நாளும் கலங்க விட்டது இல்லை.. வசதி இல்லாத வாழ்க்கையிலும் அடம்பிடித்துக் கேட்டு அழுதபோதெல்லாம் வறுமையிலும் வாங்கி கொடுத்தது அப்பா ...

- Muthu

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com