ஸ்பெஷல்
அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குதிரைகளுக்கான சிறப்புமருத்துவ முகாம் ஒன்றை திருவல்லிகேணி மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான உதயன்நிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இன்று தொடங்கி வைத்தார்.மினைகிருத்திகாஉதயநிதிதொடங்கிவைத்தார்
அப்போது செய்தியாளர்களிடம் கிருத்திகா பேசும்போது, அவர் அரசியலுக்கு வருவாரா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கிருத்திகா, தனக்கு இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.
அதன் பின்னர், குதிரைகளுக்கான இந்த மருத்துவமுகாமில் குதிரைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், மற்றும் மருத்துவபொருட்களை கிருத்திகாஉதயநிதி வழங்கினார்.

