அரசு மருத்துவர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால் ரூ.1 கோடி: அரசு அறிவிப்பு!

அரசு மருத்துவர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால் ரூ.1 கோடி: அரசு அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி சேமநல நிதி வழங்கப்படும் என தமிழக உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டதாவது:

தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் 500 ரூபாய் பிடிக்கப்பட்டு வங்கியில் செலுத்தப்படும். பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். இதை கண்காணிக்க ஊரக நலப்பணிகள் இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com