அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகள் இடம்பெற வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!

அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகள் இடம்பெற வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் நாட்டுப்புற கலைகள்ம் ஒரு பகுதியாக இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் நாட்டுப்புற கலைகள் நலிவடைந்து வருகிறது. இக்கலைகளை அழியாமல் காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் கொண்டுசெல்லும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை ஒரு அம்சமாக சேர்க்கவேண்டும். குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாட்டுப்புற கலைகளை ஒருபகுதியாக்க நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com