விழுவது, பறப்பது, நீர், தீ போன்ற கனவுகள் வந்தால் ஜாக்கிரதை! 

dreams
Beware of falling, flying, water and fire dreams!

மனிதர்கள் கனவுகள் காண்பது இயல்பானது. சில சமயங்களில் அவை தெளிவாகவும் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். மற்ற சமயங்களில் அவை குழப்பமாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும் இருக்கும். நம்முடைய கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், சிலர் அவை நமது மூளை தகவல்களை செயலாக்க மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு வழி என நம்புகின்றனர். மற்றொரு சாரார் அவை எதிர்காலத்தைப் பற்றிய எச்சரிக்கைகள் அல்லது நமது ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகள் என நம்புகின்றனர். 

இருப்பினும் சில கனவுகளை நாம் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. அப்படிப்பட்ட கனவுகள் என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

விழுவது: விழுவது என்பது பலருக்கு ஏற்படும் பொதுவான கனவுகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் பதட்டம் அல்லது பாதுகாப்பின்மை உணர்வுகளைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது உறவைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால் இத்தகைய கனவுகள் ஏற்படலாம். இது உங்கள் வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போவதைக் குறிக்கும் ஒன்றாகும். எனவே, விழுவது போல கனவு வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். 

துரத்தப்படுவது: யாரோ உங்களை துரத்துவது போன்ற வரும் கனவு நிச்சயம் உங்களுக்கு வந்திருக்கும். இது நீங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கிறீர்கள் அல்லது முடிவெடுக்கப் போராடுகிறீர்கள் என்றால், இத்தகைய கனவு வரலாம். இதுபோன்ற தருணங்களில் உங்களது முடிவுகளை சரியாக யோசித்து எடுக்கவும். 

பறப்பது: வானத்தில் பறப்பது போன்ற கனவு நினைத்துப் பார்க்க ஜாலியாக இருந்தாலும், அது உங்களுடைய ஆதிக்கம் மற்றும் சுதந்திர மனப்பான்மையின் வெளிப்பாடாக இருக்கலாம். நீங்கள் ஏதேனும் புதிய விஷயங்களை தொடங்கும் சவாலுடன் போராடுகிறீர்கள் என்றால், வானத்தில் பறப்பது போன்ற கனவுகள் வரலாம். 

பற்கள் விழுவது: பற்கள் விழுவது போன்ற கனவுகள் நீங்கள் கவலையில் இருக்கிறீர்கள் என்பதன் வெளிப்பாடு. இது உங்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மை பிரச்சனைகளின் அறிகுறியாகும். நீங்கள் வேலை அல்லது உறவில் சவால்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், பற்கள் விழுவது போல கனவுகள் வரும். 

நீர்: நீர் சார்ந்த கனவுகள் பெரும்பாலும் உணர்ச்சிகளுடன் தொடர்புடையவை. அமைதியான மற்றும் தெளிவான நீர் என்பது உங்களது அமைதியான உணர்வைக் குறிப்பதாகும். அதேசமயம் கலங்கிய நீர், உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறிக்கிறது.

தீ: கனவில் தீ சார்ந்த விஷயங்கள் தென்பட்டால் அது கோபம் மற்றும் அழிவு சம்பந்தப்பட்டதாகும். உங்கள் வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றங்களை இத்தகைய கனவு குறிக்கிறது. 

நிர்வாணமாக இருப்பது: நிர்வாணமாக இருப்பது போன்ற கனவுகள் உங்கள் உடல் மற்றும் ஆழ்மன தேவையின் வெளிப்பாட்டை எடுத்துரைக்கிறது. அவை உங்களை நீங்களே வெளிப்படுத்தி, உண்மையாக இருக்க வேண்டும் என்பதன் அறிகுறி. 

இதையும் படியுங்கள்:
பகல் கனவு காண்பதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?
dreams

எனவே இத்தகைய கனவுகள் உங்களுக்கு ஏற்பட்டால் அவற்றை முறையாகப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முற்படுங்கள். கனவுகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வது மிகவும் சிக்கலானது. எனவே உங்களது கனவுகளைப் புரிந்துகொள்ள உங்கள் வாழ்க்கையில் அவை எவ்வாறு தொடர்புடையது என்பதைந் பற்றி சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கை முறை மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப கனவுகளின் அர்த்தங்கள் மாறும் என்பதால், உங்களது கனவின் முழு விவரங்களை சிந்தித்துப் பார்த்து அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முற்படுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com