bhogi pongal
bhogi pongal festivalImage credit - medium.com

குப்பைகளை மட்டுமல்ல... கசப்பான நினைவுகளையும் எரிப்போம்!

Published on

மிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற முதுமொழிக்கேற்ப, நம் வாழ்விலும் இல்லத்திலும் உள்ள தேவையற்றதை நீக்கி, புதிய பொலிவுடன் தை மாதத்தை வரவேற்பதே இந்த போகி பண்டிகையின் நோக்கமாகும்.

பொங்கல் திருவிழாவை உழவர்கள் தங்களுக்கு உதவிய இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாக கருதுகிறார்கள். ஒரு புதிய தொடக்கத்திற்கு முன்னதாக, பழைய குப்பைகளையும் எதிர்மறை எண்ணங்களையும் அகற்ற வேண்டும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. அறுவடை முடிந்த பின்பு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்து, புதிய ஆண்டை வரவேற்பதாக கருத்துக்கள் கூறுகின்றன. சங்க காலத்தில் போகிப் பண்டிகை இந்திர விழாவாகவும் கொண்டாடப்பட்டது. மழை பொழியச் செய்யும் மேகங்களின் கடவுளான இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாள் கருதப்பட்டதாகவும் ஒரு சில குறிப்புகள் கூறுகின்றன.

போகிப் பண்டிகை வருவதற்கு முன்னதாகவே மக்கள் வீட்டை சுத்தம் செய்து வேண்டாத பொருட்களை எல்லாம் அகற்றி வைத்து விடுகிறார்கள். போகி அன்று விடியற் காலையிலேயே அதை எல்லாம் போட்டு கொளுத்தி விடுகிறார்கள். பிறகு மறுநாள் தைத் திருநாள் அன்று புதியதாக தங்களுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்குகிறார்கள். புது வீடு, கார், மொபைல் என எல்லா பொருட்களையும் வாங்குகிறார்கள்.

ஆனால் உண்மையிலேயே பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா?? பழைய சாமான்களை அகற்றி புதிய சாமான்களை வாங்குவது என்பதல்ல. நம்முடைய மனதிலிருந்து இதற்கு முன்னால் வாழ்க்கையிலே நடந்து முடிந்த கசப்பான அல்லது துக்கமான சம்பவங்களையும், பிறரை பழி வாங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தையும், ஆணவத்தையும், அகங்காரத்தையும், எதிர்மறையான எண்ணங்களையும் அகற்றி புதிய சிந்தனையோடு, களிப்போடு, நேர்மையான எண்ணங்களோடு வாழ்க்கையை தொடங்கவேண்டும். இதுதான் இந்த வசனத்திற்கான உண்மையான பொருள்.

இதையும் படியுங்கள்:
2026 பொங்கல் வாழ்த்துகள்!
bhogi pongal

இந்த பழமொழிக்கு வேறு சில விளக்கங்களும் இருக்கின்றன. அதாவது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்றால் பழைய நுட்பத்தை நீக்கி புதிய நுட்பத்தையும் ஏற்றுக் கொள்வதுதான் இயற்கையின் நியதி என்பதைக் குறிக்கிறது. இன்றைய உலகிற்கும் இது மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. தொழில்நுட்பம், சமூக வழக்கங்கள், தனிநபர் வாழ்க்கை என எல்லாவற்றிலும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இனிய திருநாளாம் இந்த பொங்கல் திருநாளில் எல்லோருக்கும் மனதில் உள்ள பழைய கசப்பான துன்பங்கள் எல்லாம் விலகி புதிய வாழ்க்கையை களிப்போடு வாழ என் வாழ்த்துக்கள்!! இருள் நீங்கி வாழ்க்கையில் ஒளி வீசட்டும்!! இனிய போகி மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

logo
Kalki Online
kalkionline.com