பிஜேபி எம்.பி கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல்: காஷ்மீர் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்!

பிஜேபி எம்.பி கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல்: காஷ்மீர் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

பிஜேபி கட்சி எம்.பி–யான கவுதம் காம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காஷ்மீர் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து இமெயில் அனுப்பியதால், அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி சைபர்பிரிவு போலீசார் தெரிவித்ததாவது:

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டில்லி லோக்சபா தொகுதியில் எம்.பி–யாக வெற்றி பெற்றார். அவருடைய இமெயில் முகவரிக்கு காஷ்மீர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்லனர். இது தொடர்பாக கவுதம் காம்பீர் போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தையடுத்து, அவருடைய வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இமெயில் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

–இவ்வாறு தெரிவித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com