#Breaking: முதல்வர் இல்லம் அருகே ஒருவர் தீக்குளிப்பு: போலீஸார் விரைந்து நடவடிக்கை!

#Breaking: முதல்வர் இல்லம் அருகே ஒருவர் தீக்குளிப்பு: போலீஸார் விரைந்து நடவடிக்கை!

Published on

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டின் அருகே ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் முக ஸ்டாலின் இல்லம் அமைந்துள்ளது இங்கு .துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முதல்வரின் வீட்டின் அருகே வந்த நபர் ஒருவர் திடீரென தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிகொண்டு தீக்குளித்தார். இதைக் கண்டு அங்கு பணீயிலிருந்த போலீஸார், விரைந்து வந்து அந்த நபர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து அவரைக் காப்பாற்றினர். பின்னர் அந்த நபர் தீக்காயத்துடன கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீக்குளித்த நபர் தென்காசி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாகவும், அவரை சிலர் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com