பிரிட்டனின் புதிய அரசர் சார்ல்ஸின் வரலாறு

பிரிட்டனின் புதிய அரசர் சார்ல்ஸின் வரலாறு

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு இனி பிரிட்டன் அரச குடும்பத்தையும், இங்கிலாந்து வளர்ச்சிக்குமான செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனும் எதிர்பார்புகள் அந்நாட்டு மக்களிடம் மேலோங்கி இருந்தது. இந்நிலையில் வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ் இங்கிலாந்து நாட்டின் மன்னராக முறைப்படி தேர்வுச் செய்யப்பட்டார். இளவரசராக இருந்த சர்லஸ் அதன்பிறகு மன்னர் மூன்றாம் சார்லஸ் என்றழைக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் அரசராக முறைப்படி நாளை (மே 6ம் தேதி )  முடிசூட்டிகொள்ளவிருக்கிறார். பிரிட்டனின் புதிய அரசரான மன்னர் மூன்றாம் சார்லஸின் எதிர்கால செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனும் எதிர்பார்ப்புகள் தற்போது மேலோங்கியுள்ளது. அதேநேரம் மன்னர் மூன்றாம் சார்லஸின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்வதற்கு முன்பு, பிரிட்டன் அரசு குடும்பத்தின் சட்ட திட்டங்களும் மன்னர் 3ம் சார்லஸின் கடந்த கால வாழ்க்கை முறை, மக்கள் இளவரசி என போற்றப்பட்ட டயனாவுடனான குடும்ப வாழ்க்கை மற்றும் விவாகரத்து. மன்னர் 3ம் சார்லஸின் இயற்கை முறையிலான விவசாய திட்டம், பருவநிலை மாற்றம் குறித்த அவரின் கண்ணோட்டம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை நடத்திவரும் அவரின் செயல்பாடுகள் ஆகியவற்றை தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது.

அன்புக்கு ஏங்கிய சார்லஸ்

மறைந்த ராணி எலிசபெத் பிரிட்டனின் ராணியாக பொறுப்பேற்பதற்கு முன்பே அவருக்கும் மன்னர் பிலிப்புக்கும் 1947ம் ஆண்டு நவம்பர் 20ல் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் 2ம் உலகப்போரால் பொலிவிழந்திருந்த லண்டன் மாநகருக்கு விழாகோலம்பூட்டியது. திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே இத்தம்பதியினருக்கு 1948ல் முதல் குழந்தையாக பிறந்தார் இளவரசர் சார்லஸ். அவர் பிறந்தபோதே பிரிட்டன் மன்னராட்சியை வழிநடத்தபோகும் அடுத்த மன்னர் என மக்களால் போற்றப்பட்டார். இளவரசர் சார்லஸ்க்கு பிறகு ஆனி, எட்வர்ட், ஆண்ட்ரூ என மொத்த நான்கு குழந்தைகளுக்கு தாயானார் எலிசபெத். இதற்கிடையில் அப்போது மன்னராக இருந்த எலிசபெத்தின் தந்தை எட்வர்ட் நுரையீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அதுவரை பிரிட்டன் அரசு குடும்பத்தை ஏற்று நடத்துவதற்கான பொறுப்புகளையோ அல்லது இங்கிலாந்து தேசத்தை முன்னேற்றுவதற்கான எந்த அனுபவமும் எலிசபெத் பெற்றிருக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் 1953ல் பிரிட்டனின் ராணியாக 2ம் எலிசபெத் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அப்போது ஐந்து வயது நிரம்பிய சிறுவனாக இருந்த சார்லஸ் தன் தாயின் முடிசூட்டு விழாவின்போது உடனிருந்தார். ஆனால் அதன்பிறகுதான் சார்லஸ்க்கும் அவரின் தாயுக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. 2ம் உலகப்போரின் தாக்கத்தால் மீண்டெழுந்துக்கொண்டிருந்த பிரிட்டனை வலுவாக காலூன்றிக்கு நிற்கச் செய்ய ராணி 2ம் எலிசபெத்தின் இருப்பு அதிகளவில் தேவைப்பட்டது. இதன்காரணமாக தனது பாட்டி எலிசபெத் போஸ் அரவணைப்பிலும் ஏராளமான குழந்தை வளர்ப்பு தாதிகள் மத்தியில் வளரத் தொடங்கினார் சார்லஸ். தாயுடான பிரிவும், பாட்டியின் அதிகப்படியான அன்புமும் சார்லஸை ஒரு பிடிவாதமான குழந்தையாக வளர்தெடுத்தது.

கொடுமையான பள்ளி நாட்கள்

இதற்கிடையல் தன்னுடைய 8 வயதில் மேற்கு லண்டனில் உள்ள ஹில் ஹாவுஸில் தனது பள்ளி படிப்பை தொடங்கினார் சார்லஸ். ஆனால் சார்லஸின் குறும்புதனம் காரணமாக அவரின் தந்தை பிலிப் ஸ்காட்லாந்தில் தான் படித்த GORDONSTOUN பள்ளியில் அவரை சேர்த்தார். மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்ட GORDONSTOUN பள்ளியில், மாணவர்கள் குளிர்காலத்தில் தங்களை தகவமைத்துக்கொள்வதற்காக குளிர்ந்த நீரில்தான் குளிக்கவேண்டும், இரவு ஜன்னல்களை திறந்துவைத்துக்கொண்டுதான் தூங்கவேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த கொடுமைகளை எல்லாம் தங்கிக்கொள்ள முடியாமல் அழுதுக்கொண்டு சார்லஸ் அரமணைக்கு வந்தாலும், தந்தை பிலிப் தன்னுடைய முடிவில் உறுதியாகவே இருந்தார்.

படிப்பு, விளையாட்டு என எந்தவொரு விஷயத்திலும் பின்தங்கி இருந்த இளவரசர் சார்லஸ்க்கு பள்ளி நாட்கள் கொடுமையான நாட்களாகவே இருந்துள்ளது. "பள்ளியில் இருந்த நாட்களைவிட நான் வீட்டில் இருப்பதையே அதிகம் விரும்பினேன்" என பின்னாளில் இளவரசர் சார்லஸ் கூறி நிகழ்வுகளும் உண்டு. இதன்பின் கேம்பிரிட்ஜில் உள்ள டிரின்ட்டி கல்லூரியில் தொல்லியல், மானுடவியல் மற்றும் வரலாறு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றார். பின்னர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சார்லஸ் வேலஸ் வரலாறு மற்றும் இலக்கியத்தில் இளங்களை பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோதே 1969ல் தன் தாயும் ராணி 2ம் எலிசபெத் முன்னிலையில் பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்ட வேல்ஸ் பிரேதேசத்தின் இளவரசராக அறிவிக்கப்பட்டார். அப்போது ராணி 2ம் எலிசபெத்தின் கைகளைப் பற்றி கொண்டு ''உங்கள் நம்பிக்கையையும் உண்மையையும் காப்பேன், மக்களுக்காக வாழவும் சாவவும் செய்வேன்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டார். தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்றார்போல் வேல்ஸ் பிரேதேசத்திற்கு 53 ஆண்டுகாலம் இளவரசாராக இருந்ததுள்ளார் சார்லஸ். அவரின் ஆட்சியில் வேல்ஸ் பிராந்தியம் இங்கிலாந்து நாட்டின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக மாற்றம்காண்டுள்ளார்.

சார்லஸின் காதலிகள்

இதன்பின் 1971ல் பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்த இளவரசர் சார்லஸ் ராயல் விமானப் படையின் விமானியாகத் தகுதி பெற்றார். ராணுவத்தில் இருந்தபோது பல வித்தியாசமான சாகசங்களை செய்துபார்க்கும் சார்லஸ்க்கு ‘அதிரடி நாயகன்" எனும் பட்டப்பெயரும் உண்டு. நீர்மூழ்கிக் கப்பல்களில் பயிற்சி பெற்ற சார்லஸ் முக்குளிப்பவராகவும் கமாண்டோவாகவும் பிரிட்டிஷ் கப்பல் படையில் உயர்ந்தார். பல்வேறு கப்பல்களில் சேவை செய்த பிறகு ராயல் கடற்படையில் இருந்த "மேன் ஹன்டர் எச்.எம்.எஸ் ப்ரோனிங்டன்" கப்பலின் கேப்டனாக உயர்ந்தார். இதேகாலகட்டத்தில் இளவரசர் சார்லஸ் பிரிட்டன் முழுவதும் ஒரு ப்ளேபாளையாக அறியப்பட்டார். 70களின் காலகட்டத்தில் சார்லஸ் தனது பெண் தோழிகளுடனான புகைப்படங்கள் நாளிதழ்களில் தலைப்பு செய்தியானது. குறிப்பாக Davina Sheffield, Caroline Longman, Rose Hanbury, Amanda Knatchbull, Sabrina Guinness, Lady Jane Wellesley, Anna Wallace என இளவரசர் சார்லஸின் ஆசை நாயகிகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போனது.

ஆனால் இவர்களில் Lady Jane Wellesley மற்றும் Anna Wallace ஆகியோரை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என நினைத்தார் சார்லஸ். பிரிட்டனின் அடுத்த மன்னராகபோகும் சார்லஸின் மனைவியாக பல பெண்கள் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரின் திருமண ஆசையை நிராகரித்தார்கள் Lady Jane Wellesleyயும் Anna Wallaceம். இதற்கு காரணம் அப்போதிலிருந்தே கமில்லா பார்க்கர்வுடன் சார்லஸ்க்கு இருந்த ஆழமான காதல்தான். பல பெண்களுடன் சார்லஸ் டேட்டிங்கில் ஈடுபட்டாலும் அவரின் SOULMATEஆக எப்போதும் கமில்லாவே இருந்தார். ஆனால் அப்போது கமிலாவுக்கு பிரிட்டன் அரச குடும்பத்தின் படைப்பிரிவில் உயர் பொறுப்பில் இருந்த ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ்வுடன் திருமணமாகி இருந்தது. இதன்காரணமாக பிரிட்டன் அரசு குடும்பத்தில் உயர் பொறுப்புகளில் இருந்தவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்புக்கு கமிலாவுக்கு கிடைத்தது. இப்படித்தான் இளவரசர் சார்லஸ்க்கும் கமிலாவுக்கு இடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. காலபோக்கில் இருவருக்கும் இடையிலான நட்பு காதலாகவும் மாறியது. ஆனால் இதனை அவர்கள் இருவரும் ரகசியமாகவே வைத்திருந்தனர். இந்த தருணத்தில்தான் டயானாவின் சகோதரி சாராவுடன் தொடர்பில் இருந்த சார்லஸ்க்கு 16 வயது நிரிம்பியிருந்த டயானாவுடன் அறிமுகம் ஏற்பட்டது.

சார்லஸ் டயானா திருமணம், விவாகரத்து

பின் சார்லஸின் காதல் வலையில் விழ்ந்த டயானா தன்னுடைய 20 வயதில் 32 வயதான சார்லஸை 1981ல் திருமணம் செய்துக்கொண்டார். அவர்கள் இருவருக்குமான காதல் வாழ்க்கை சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. கமிலாவுடன் சார்லஸ்க்கு இருந்த தொடர்பு மக்களின் இளவரசி என்றழைக்கப்பட்ட டயானாவுக்கு தெரியவந்தது. தன்னுடைய திருமண வாழ்க்கை தொடர்பாக பேசிய டயானா, "இளவரசர் சார்லஸ் தன்னுடைய அரச பொறுப்புகளை பகிர்ந்துகொள்வதற்கான ஒரு நபரை தேடிக்கொண்டிருந்தார். அதற்காக அவரும் மற்றும் அவரின் தோழியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்தான் நான். அரச பொறுப்புகளை என்னிடம் விட்டுவிட்டு அவர் சுதந்திரமாக இருக்க நினைத்தார். சார்லஸின் மனதில் எப்போதும் வேறு ஒரு பெண்ணுக்கு இடம் இருந்தது. என்னுடைய திருமணத்தில் நான், சார்லஸ் மற்றும் கமிலா ஆகிய மூன்று பேரும் இருந்தோம்" என சார்லஸ் கமிலாவுடனான ரகசிய உறவை ஊடகங்களில் போட்டு உடைத்தார் டயானா.

இதற்கிடையில் டயானாவுக்கும் சார்லஸ்க்கும் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் பிறந்திருந்தானர். மனப்போராட்டங்களுடன் வாழ்ந்து வந்த டயானாவுக்கு 1996ம் வருடம் சார்லஸிடம் இருந்து விவாகரத்துக்கு பெற்றார். சார்லஸ் டயானா விவாகரத்து ஆவதற்கு ஓராண்டு முன்புதான் கமிலா தன்னுடைய கணவர் ஆண்ட்ரூவிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார். ஆனால் டயானா விவாகரத்து பெற்ற அதற்கு அடுத்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். உலகையே பேர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய டயானாவின் மரணம் இதன்பிறகு 1999ம் ஆண்டு ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் தோன்ற ஆரம்பித்தனர் கமிலாவும் சார்லஸம். பின் கடும் போராட்டத்துக்கு பின்னர் ராணி 2ம் எலிசபெத்தின் அனுமதிக்கு பிறகு,2005ம் ஆண்டு தங்களுடைய 35 ஆண்டுகால காதல் வாழ்க்கையை திருமணத்தில் முடித்தனர்.

அதிர்ச்சி ஏற்படுத்திய "BLACK SPIDER MEMOS"

இதன்பின் The Duchess of Cornwall பகுதிக்கு இளவரசி ஆக்கப்பட்டார் கமிலா. இளவரசர் சார்லஸின் தனிப்பட்ட வாழ்க்கை தலைப்பு செய்திகளில் இடம் பெற்ற அளவுக்கு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அவரின் அரசியல் தலையீடுகளும் கவனம் பெற்றது. குறிப்பாக பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாக அரசியல் தலையீடுகளில் ஈடுபடக்கூடாது என்பது விதியாக உள்ளது. ஆனால் இதனை மீறி 2004 மற்றும் 2005களில் இளவரசர் சார்லஸ் தன் கைகப்பட பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு எழுதிய கடிதங்கள் ஆட்சியாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இளவரசர் சார்லஸ் தேவையில்லாமல் நாடாளுமன்ற நடவடிக்கையில் மூக்கை நுழைப்பதாக விமர்சிக்கப்பட்டார். "BLACK SPIDER MEMOS" என அழைக்கப்படும் இந்த கடிதங்களில் இராக் போரில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர்களுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்க வேண்டும், மாற்றும் மருத்துவம், பருவநிலை மாற்றம் குறித்து விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். இதன்காரணமாக தற்போது மன்னராக பொறுப்பேற்ற சார்லஸின் அரசியல் தலையீடுகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஆட்சியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேபோல் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற கிளாஸ்கோ மாநாட்டில் பேசிய சார்லஸ், காலநிலை மாற்றத்தை கையாள போர்க்கால நடவடிக்கை வேண்டும் என்று உலகத்தலைவர்களிடம் ஒருமித்த கோரிக்கையை விடுத்துள்ளார். அதேபோல் மன்னர் 3ம் சார்லஸ் நடத்திவரும் The Prince's Charities தொண்டு நிறுவனம் மூலம் ஆண்டுக்கு 100 கோடி யூரோ நிதி திரட்டப்பட்ட இளைஞர்களுக்கு தொழில் மற்றும் மாணவர்களின் கல்விக்கு செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில் இந்த தொண்டு நிறுவனம் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. அதேபோல் உலக முழுவதுதிலும் 500க்கும் மேற்கட்ட தொண்டு நிறுவனங்களில் தலைவராக உள்ளார் மன்னர் 3ம் சார்லஸ். ஒருபக்கம் வெற்றிகாரமாக தொண்டு நிறுவனம் நடத்திவந்தாலும் தன்னுடைய குடும்ப விஷயத்தில் தோல்வி கண்டவராகவே உள்ளார் அவர். குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள சகோதரர் ஆண்ட்ரூ விஷயத்தில் மௌனம் காப்பது மற்றொன்று 2019ல் பிரிட்டனின் அரசு பதவிகளில் இருந்து விலகிய 2வது மகன் ஹாரி, மருமகள் மேகன் ஆகியோரின் விஷயத்தில் சார்லஸின் செயல்பாடு உலகளவில் கவனிக்கப்பட்டது. இவ்வாறு அரசியல் ரீதியாகவும் பொதுவாழ்விலும் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார் தற்போது பிரிட்டனின் மன்னரான 3ம் சார்லஸ்.

ஹாரி பிரிட்டன் மன்னராவாரா?

அதேநேரம் ராணி 2ம் எலிசபெத் மரணத்தை 15ம் நூற்றாண்டிலேயே கணித்த பிரெஞ்சு ஜோதிடர் மைக்கேல் டி நாஸ்ட்ரேடேம் கூற்று தற்போது விவாத பொருளாகியுள்ளது. அதாவது ராணியின் மறைவுக்கு பிறகு வரும் மன்னர் குறுகிய காலம் மட்டுமே ஆட்சி செய்வார் என்றும், மன்னர் பொறுப்புக்கே வரமாட்டார் என கருதப்படும் ஒருவர் பிரிட்டன் மன்னர் ஆவார் என 400 ஆண்டுகளுக்கு முன்பு கணித்துள்ளார். இதன்காரணமாக தற்போது அரச நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஹாரி பிரிட்டன் மன்னராவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பொதுவாக பிரிட்டன் அரசு குடும்பத்தில் மன்னர் அல்லது ராணி எனும் உயர் பொறுப்புகளை வகிக்கும் நபர்களுக்கு என தனி சட்டத்திட்டங்கள் உள்ளது. 1865ல் WALTER BAGEHOT என்பவரால் எழுதப்பட்ட THE ENGLISGH CONSTITUTION புத்தகத்தில் முக்கியமாக 2 விஷயங்களை இங்கிலாந்து மன்னர்கள் பின்பற்றுவது கட்டாயமாக உள்ளது. ஒன்று தன்னுடைய குடும்பத்தின் ஒற்றுமையாக பாதுகாப்பது. இரண்டாவது நவீன காலத்திற்கு ஏற்றார்போல் மன்னராட்சியின் கண்ணியத்தை கிறிஸ்துவது மதத்தின் வலிமையால் பலப்படுத்தி காக்கவேண்டும். ஆனால் ராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு மன்னராட்சிக்கு எதிரான குரல்கள் பிரிட்டனில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது மன்னராகி உள்ள 3ம் சார்லஸ் எவ்வாறு செயல்படுவார் என்பது பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com