International Burger Day: பர்கர் பிரியர்களே ஒன்று கூடுங்கள்! 

Burger Day
International Burger Day
Published on

தயாராகுங்கள் உணவுப் பிரியர்களே! இன்று சர்வதேச பர்கர் தினம் என்பதால், கிரில்லை தீ மூட்டி, அதில் பன்களை அடுக்கி உங்களது வாயை ஜூசி இன்பத்தில் மூழ்கடிக்கும் நேரம் இது. இந்த புகழ்பெற்ற நாளில் உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பர்கர் ஆர்வலர்கள் ஒன்று கூடி, பர்கரை சுவைத்து கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.  

சர்வதேச பர்கர் தினம்: ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச பர்கர் தினம், உலகம் முழுவதும் பிரபலமான இந்த உணவை கௌரவிக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இனிமையான நாளாகும். இந்த சுவைமிக்க உணவை இந்த நாளில் ஆர்வத்துடன் மக்கள் வாங்கி சாப்பிடுவார்கள். பர்கர்களுக்கு ஒரு சிறந்த வரலாறு உண்டு. நீண்ட காலத்திற்கு முன்பே ஜெர்மனியில் தோன்றியதாக நம்பப்படுகிறது. ஆனால் அமெரிக்காவிலேயே பர்கர் பிரபலமடைந்தது. அந்த காலத்தில் இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையில் இறைச்சியை வைத்து சாப்பிடும் யோசனையிலிருந்து பர்கர்  உருவானதாக சொல்லப்படுகிறது. அப்போது முதலே எல்லா வயதினரும் விரும்பி உண்ணும் உணவாக பர்கர் மாறிவிட்டது. 

நவீன கால பர்கரின் பிறப்பிடமான அமெரிக்கா, பலவிதமான பர்கர்களை தயாரிப்பதில் பிரபலமானதாகும். கிளாசிக் சீஸ் பர்கர் முதல் நவீன கால அடுக்க வைக்கப்பட்ட பர்கர்கள் வரை அவற்றின் சுவை பட்டையைக் கிளப்பும். அமெரிக்காவின் பர்கர்கள் அவற்றின் ஜூஸியான இறைச்சித் துண்டு மற்றும் சுவை மிக்க பன்களுக்கு பெயர் பெற்றவை. 

இதற்கு அடுத்தபடியாக பிரபலமாக இருப்பது மெக்ஸிகோ பர்கர்கள். நீங்கள் காரத்தை விரும்பி சாப்பிடும் நபராக இருந்தால், மெக்சிகன் பர்கர் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பர்கருக்கு கூடுதல் சுவையூட்டுவது மெக்சிகன் சீஸ்தான். மேலும் குவாக்கமோல், சால்சா மற்றும் ஜலபிநோஸ் ஆகியவையும் மெக்சிகன் பர்கரில் சேர்க்கப்படுகின்றன. 

இந்திய நாட்டு பர்கரைப் பொறுத்தவரை, இந்தியாவின் பிரபல மசாலா பொருட்களின் கலவையுடன் நமது சுவை நரம்புகளை நடனமாடச் செய்கிறது. நன்கு வேக வைக்கப்பட்ட தந்தூரி சிக்கன் அல்லது மசாலா கலந்த வெஜிடபிள் கலவைகளை நடுவில் வைத்து, சுவையான சட்னிகள், நறுமண மசாலாக்கள் மற்றும் மிருதுவான பப்படங்களும் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. இதன் சுவையை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. 

சர்வதேச பர்கர் தின கொண்டாட்டம்: இன்று பர்கர் தினம் என்பது உங்களுக்கு இப்போது தெரிந்துவிட்டது. எனவே உடனடியாக இந்த தினத்தை எப்படி கொண்டாடலாம் என்பதற்கான வழிகளைப் பற்றி பார்க்கலாம். 

உடனடியாக உங்களது நெருங்கிய நண்பர்கள் உறவினர்களுக்கு போன் போட்டு உங்கள் வீட்டுக்கு வர சொல்லுங்கள். அவர்களுக்கு உங்கள் கையால் பர்கர் செய்து கொடுங்கள். இது உங்களுக்குள் இருக்கும் பிணைப்பை அதிகரிக்கும். இல்லை என்னால் பர்கர் செய்ய முடியாது என்றால், குடும்பத்துடன் வெளியே சென்று உங்களுக்கு பிடித்த பர்கரை ஆர்டர் செய்து சாப்பிடுங்கள். 

நமது ஊரில் தற்போது பல இடங்களில் பர்கர் கிடைக்கிறது. மிகப் பிரபலமான நிறுவன பர்கரில் இருந்து, வெளியே ரோட்டாரத்தில் கிடைக்கும் Food Truck பர்கர் வரை அனைத்துமே தற்போது நமது ஊர்களில் கிடைக்கிறது. எனவே உங்கள் விருப்பம் போல வெளியே சென்று பர்கரின் சுவையை அனுபவியுங்கள். 

அல்லது, உங்களுக்கு ஏதேனும் பர்கர் ரெசிபி தெரியும் என்றால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதை உங்களுக்காக செய்து தரும்படி கோரிக்கை வையுங்கள். நீங்களும் உங்களுக்குப் பிடித்த பர்கரை தயாரித்து, பிறருடன் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம். 

இதையும் படியுங்கள்:
Personal Finance: இந்திய சாமானியர்களுக்கான அத்தியாவசிய நிதிக் குறிப்புகள்! 
Burger Day

இல்லை எங்களால் பர்கர் சாப்பிட முடியாது என்றால், உலகெங்கிலும் தற்போது பர்கர் பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் விருச்சுவல் வாயிலாக இணையுங்கள். உங்களது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்கள் யாரேனும் வெளிநாட்டில் இருந்தால், அவர்களுக்கு வீடியோ கால் செய்து, நீங்கள் பர்கர் சாப்பிடுவதை அவர்களுக்கு காட்டி மகிழுங்கள். 

இப்படி பல விதங்களில் இந்த பர்கர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடலாம். ஒருவேளை இந்த பதிவை படித்துவிட்டு நீங்கள் பர்கர் சாப்பிடக் கிளம்பினால், அதை குறைவாகவே சாப்பிட வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பர்கரின் சுவை சூப்பராக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டால் உடலுக்குக் கெடுதலே. எனவே, சுவையை அனுபவிக்கும் அதே வேளையில் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com