சென்னை நகரம் முன்பு மதராஸ் என்று அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு 386வது சென்னை தினம் ஆகஸ்ட் 22- ல் கொண்டாடப்படுகிறது. சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் மற்றும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகும். இது வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது.
சென்னையின் வரலாறு.
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் ஒரு சிறிய மீன் பிடி கிராமத்தில் இருந்து ஒரு பெரிய நகரமாக வளர்ந்தது சென்னை.
சென்னை ஆரம்பத்தில் மதராசபட்டணம் என்று அழைக்கப்பட்டது. இது தொண்டை மண்டல பகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.
17ம்நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து தங்களது வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒரு பகுதியை தேர்ந்தெடுத்தனர். பின்னர் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர். இது சென்னையின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய புள்ளியாக அமைந்தது.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கீழ் சென்னை ஒரு முக்கிய வர்த்தக மற்றும் நிர்வாக மையமாக வளர்ந்தது. மேலும் அது ஒரு பெரிய நகரமாக உருவானது. 1966-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சரான மு.கருணாநிதியால் மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாற்றப்பட்டது.
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். இந்தியாவில் 1644ல் மேலைநாட்டவர்கள் கட்டிய முதல் கோட்டை இதுதான் இந்த கோட்டை தமிழக சட்டசபையாக இத்தனை ஆண்டுகள் ஓய்வின்றி பணியாற்றுகிறது. தமிழகத்தின் முதல் சட்டசபை 1921 இல் நடத்தப்பட்டது.
சென்னையின் சரித்திரத்தை புரட்டும்போது கூவம் நதிக்கு முக்கிய இடம் உண்டு. 72 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கழிவு நீர் கலக்கும் நாற்றமான நதிக்கு பின்னே அழகான வரலாறு உள்ளது.மெட்ராஸ் என்ற நகரம் உருவாக கூவம் நதி முக்கிய காரணம். தெற்கில் அது பாதுகாப்பாக இருந்ததால் இதன் கரையில் ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள்.
இன்றுள்ள பழம்பெரும் கோவிலான சென்னை கேசவபெருமாள் கோவில், சென்னை மல்லீஸ்வரர் ஆலயமும் அன்றைய காலம் தொட்டு இருந்து வருவதாக இலக்கியங்களில் கூறப்பட்டு வருகிறது. அந்த இலக்கியங்கள் மூலம் ஆரம்ப நாட்களில் இப்பகுதியை சென்னாபட்டினம் என்றும் மீனவரசன் மதனேசன் இப்பகுதியை ஆண்டு வந்ததால் மதராசபட்டணம் என்றும் அழைத்தனர். அதன்பின் சென்னையை விரிபடுத்திய சென்னப்ப நாயக்கரின் பெயராலேயே சென்னை என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் கட்டடங்களில் ஒன்று சென்னை கார்ப்பரேஷன் ஆக இயங்கும் ரிப்பன் பில்டிங். இந்தோ சாரா செனிக் பாணியில் வெள்ளை வெள்ளை வெளேர் என்று இருக்கும்கட்டிடத்தின் பெரும் பகுதியை கட்டியவர் லோகநாத முதலியார் என்ற தமிழர்தான்.
252 அடி நீளம் 126 அடி அகலம் 3 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் முதல் மாடியே 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. இதன் மத்தியில் உள்ள டவர் 132 அடி உயரம் 8 அடி அளவுள்ள கடிகாரம் இதைக் கட்ட அந்த காலத்தில் 7.50 லட்சம் ரூபாய் செலவானது. இது கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் ஆயிற்று. காமன்வெல்த் நாடுகளில் முதலில் தோன்றிய கார்ப்பரேஷன் என்ற பெருமை சென்னை ரிப்பன் பில்டிங் பெற்றுள்ளது.
மெரினா கடற்கரை சென்னையின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று. மெரினா கடற்கரை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம் ஆகும். நீண்ட கடற்கரையோரம் பூங்காக்கள் மற்றும் கடைகளால் நிரம்பி உள்ளது. இங்கு அற்புதமான சூரிய அஸ்தமனத்தையும் கண்டு களிக்கலாம். கூடுதலாக கடற்கரையில் ஏராளமான சிற்றுண்டி கடைகள் விற்பனை செய்து கடற்கரையில் பல்வேறு வகையான சவாரிகளையும் குழந்தைகள் அனுபவிக்க முடியும்.
மெரினா கடற்கரை நோக்கி அடையாளமாக இருப்பது சென்னை கலங்கரை விளக்கம். இந்தியாவில் நகர எல்லைக்குள் அமைந்திருக்கும் ஒரே கலங்கரை விளக்கமாகவும் திகழ்கிறது.
இடையில் சிறிது காலம் மூடப்பட்டிருந்தாலும் 1976 ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்சன் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தால் கட்டப்பட்டு 1977 முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது என்று ஆரம்பகால வரலாறு குறிப்பிடுகிறது.
சென்னையில் பார்வையிட இதைவிட சிறந்த இடம் வேறு எதுவும் இல்லை.
எழும்பூரில் உள்ள சென்னை மத்திய அருங்காட்சியகம் அனைவரும் காணவேண்டிய புகழ் பெற்ற ஒரு அருங்காட்சியமாகும். இது 1851 -ல் நிறுவப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியமாகும். சென்னையில் உள்ள மிகச்சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று.ரோமானிய கலை பொருட்கள் பழங்கால வெண்கல சிலைகளுக்கு பிரபலமானது. பழைய சிற்பங்கள் ஆயிரம் மற்றும் அதற்கும் முந்தைய காலத்தை சேர்ந்தவை. சென்னையில் இந்த அருங்காட்சியத்தின் சுவர் வேலை அலங்கரிக்க கலை பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள் இதன் காட்சிகளை சுற்றிப் பார்த்துக் கண்டு மகிழலாம்.
இங்கு பரிசு பொருட்கள் கைவினைப் பொருட்கள் வரும் நினைவு பரிசுகள் விற்பனை செய்யும் கடையும் உள்ளது. நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாட்டிலிருந்து ஒரு நினைவு பரிசு பொருளை வாங்கிச் செல்லலாம். காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகம் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை விடுமுறை.
மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், கோயில்கள், கோல்டன் பீச்,செயின்ட் தாமஸ் கதீட்ரல்பசிலிக்கா, ஆயிரம் விளக்கு மசூதி, அண்ணா நூற்றாண்டு நூலகம், மால்கள் என சென்னையில் பிரபலமான நிறைய இடங்கள் உள்ளது. வேலைத்தேடி வருவோரை, வந்தாரை வாழவைக்கும் சென்னையை போற்றி பாராட்டுவோம் இந்த சென்னை தினத்தில்!