சென்னை மழை வெள்ள சேதம்: மத்தியக்குழு இன்று நேரில் பார்வை!

சென்னை மழை வெள்ள சேதம்: மத்தியக்குழு இன்று நேரில் பார்வை!
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 10 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏறபடுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழக வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.2,629 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் தமிழகத்தின் வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமியிலான 7 பேர் கொண்ட குழு நேற்று சென்னை வந்தது.

இநத் மத்தியக் குழு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர்
சென்னை மாநகராட்சியில் வைக்கப்பட்டிருந்த வெள்ள சேத பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.

அதைத் தொடர்ந்து மத்தியக் குழு இன்று சென்னையில்வெள்ளசேதங்களைபார்வையிட்டனர். இந்த குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுமேலாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com