‘பொன்னியின் செல்வன்’; சோழர்கால கல்வெட்டுகளுக்கு மவுசு!

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

-பிரமோதா

 பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஏற்படுத்திய ஆர்வம் , சோழர் கல்வெட்டுகளை தேடி எடுத்து இணையத்தில் பகிர்கின்றனர் இன்றைய இளம் தலைமுறையினர்.

 சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த சோழர்கால கல்வெட்டுகளில் ராஜராஜன் , வந்தியத் தேவன் , பழுவேட்டரையர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதை பகிர்ந்து வருகின்றனர்.

பழுவேட்டரையர் கல்வெட்டு
பழுவேட்டரையர் கல்வெட்டு

அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி, ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் , திரைப்படத்தில் தோன்றும் நடிகர்களின் கதாபாத்திர பெயர்கள் இடம்பெற்றுள்ள சோழர் கல்வெட்டுகளை தேடிச் சென்று ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.  

செம்பியன் மாதேவி  கல்வெட்டு
செம்பியன் மாதேவி கல்வெட்டு

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவர் வல்லவரையன் வந்தியத்தேவன் ஆவார். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். இந்நிலையில் வந்தியத்தேவன் பெயரைக் குறிப்பிடும  தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டின் வரிகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

வந்தியத்தேவன் கல்வெட்டு
வந்தியத்தேவன் கல்வெட்டு

மேலும்ராஜராஜ சோழனின் இயற்பெயரான அரு(ள்)மொழித் தேவன் என்பதை குறிப்பிடும் தஞ்சை பெரியகோயில் கல்வெட்டு,  பழுவேட்டரையர்களை குறிப்பிடும் பளூர் கோயில் கல்வெட்டு, கண்டராதித்த சோழன் பெயரை குறிப்பிடும் திருநல்லம் கல்வெட்டு , வானவன் மாதேவி பெயர் இடம்பெற்றுள்ள உடையார்குடி கல்வெட்டு, உத்தம சோழரின் பெயரிலான திருக்கோடிக்கா கல்வெட்டு , செம்பியன் மாதேவி பெயரை குறிப்பிடும் திருநல்லம் கல்வெட்டு , ஆதித்த கரிகாலன் பெயரிலான கும்பகோணம் நாகேஷ்வரர் கல்வெட்டு ஆகியவை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

அரு(ள்)மொழித் தேவன் கல்வெட்டு
அரு(ள்)மொழித் தேவன் கல்வெட்டு

 மேலும் ஆதித்த சோழனின் மரணத்திற்கு காரணமாக வரலாற்றில் குறிப்பிடப்படும் சோமன் ரவிதாசன் , பரமேஸ்வரன் , பிரம்மாதிராஜன் ஆகியோரது பெயரையும் , அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்தும் கூறும் உடையார்குடி கல்வெட்டு பலரால் விரும்பிப் பார்க்கப் படுகிறது.  

ஆதித்த சோழனின் மரணத்தை  குறிப்பிடப்படும்  கல்வெட்டு
ஆதித்த சோழனின் மரணத்தை குறிப்பிடப்படும் கல்வெட்டு

தமிழ் மொழியின் தொன்மையான கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையினருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் உணர்த்தியுள்ளதாக தொல்லியலாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கண்டராதித்த சோழன் பெயரை குறிப்பிடும் திருநல்லம் கல்வெட்டு
கண்டராதித்த சோழன் பெயரை குறிப்பிடும் திருநல்லம் கல்வெட்டு

தற்கிடையே ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் பணியை தொடங்கினார் மணிரத்னம். லைகா ப்ரொடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுக்க 5 மொழிகளில் வெளியாகினது.

 இந்த படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி, திரிஷா,ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி,சோபிதா, பார்த்திபன், சரத்குமார்,பிரபு, விகரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

உத்தம சோழரின் பெயரிலான திருக்கோடிக்கா கல்வெட்டு
உத்தம சோழரின் பெயரிலான திருக்கோடிக்கா கல்வெட்டு

படம் வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுக்க 200 கோடி வசூலை குவித்து அசத்தியுள்ளது.

 இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2-ம் பாக திரைப்படத்தை அடுத்த ஆண்டு கோடையில் வெளியிடத் தீர்மானித்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com