டிசம்பர் 6: பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

டிசம்பர் 6: பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

டிசம்பர் 6-ம் தேதியான இன்றுபாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படு வதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசத்திலுள்ள, அயோத்தியில் கடந்தடிசம்பர்6, 1992 ஆம்ஆண்டுபாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி இந்துக்களுக்கும் ஸ்லாமியர்களுக்கும் இடையே மதக்கலவரங்கள் மீண்டு பலர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து,ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.. இதனால்,நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்திலும் இன்று விமான மற்றும் ரயில் நிலையங்கள்,பிரபலமானகோவில்கள், வணிகவளாகங்கள்,அரசுஅலுவலங்கள்,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,தமிழகஎல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com