தீபத் திருநாள்: திருவண்ணாமலை ஆலயத்தில் ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்!

தீபத் திருநாள்: திருவண்ணாமலை ஆலயத்தில் ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவம்பர் 7-ம் தேதிமுதல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளீயிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் தீபத் திருநாளை முன்னிட்டு, பக்தர்கள் அந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகிறது. அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் இ– பாஸ் பெற வேண்டும். அதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். நாளை முதல் (நவம்பர் 6) ஆன்லைனில் முன்பதிவு தொடங்கப் படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 10-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in என்ற இணைய தளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம் ஆகியவற்றை தேர்வுசெய்து இ– பாஸ் பெறலாம்.

–இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com