கையால் கடிதம் எழுதுவதன் தனித்துவம் தெரியுமா?

செப்டம்பர் 1, உலக கடிதம் எழுதும் தினம்
கடிதம்
கடிதம்
Published on

ற்போதைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ் அப் மற்றும் இமெயில் வழியாக பெரும்பான்மையான கடிதப் போக்குவரத்துகள் நடக்கிறது. ஆனால், கையால் கடிதங்கள் எழுதுவது பலவிதமான நன்மைகளைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் தகவல் தொடர்புக்கு இல்லாத ஒரு குறிப்பிட்ட தனித்துவமும் சக்தியும் இதற்கு உண்டு.

உணர்ச்சித் தாக்கம்: கையால் எழுதப்படும் கடிதம் மின்னஞ்சலில் எழுதப்படும் கடிதத்தை விட தனித்தன்மை வாய்ந்ததாகவும் இதயபூர்வமாக உணர்ந்தும் எழுதப்படுகிறது. ஏனென்றால், கையால் ஒரு கடிதத்தை எழுதும்போது அதற்கான நேரமும் முயற்சியும் கவனமும் சிந்தனையும் அதிகம் தேவைப்படும். கையால் எழுதப்படும் கடிதங்களை சேமித்து வைக்கலாம். பெரும்பாலும் சென்டிமென்ட் மதிப்புடன் பொக்கிஷமான நினைவுகளாக மதிக்கப்படும்.

அறிவாற்றல் நன்மைகள்: கணினியில் தட்டச்சு செய்வதை விட, செல்போன் கீபோர்டை உபயோகித்து எழுதுவதை விட, கையால் எழுதுவது மூளையின் பல்வேறு பகுதிகளை ஈடுபடுத்துகிறது. இது நினைவாற்றல் மேம்பாட்டையும் நல்ல புரிதலையும் அதிகப்படுத்துகிறது. விஷயங்களை ஞாபகத்தில் இருந்து மீட்டு, எழுதுவதற்கு அதிக அறிவாற்றல் முயற்சி தேவைப்படுகிறது.

படைப்பாற்றல் மற்றும் சிந்தனை திறன்: கையால் கடிதம் எழுதும்போது நன்கு சிந்தித்து மனதின் ஆழத்தில் இருந்து எழுத முடியும். அது மிக உணர்வு பூர்வமாகவும் அமையும் ஆழமான மன உணர்வுகளின் பிரதிபலிப்பாக கடிதம் அமைகிறது. இது ஆக்கப்பூர்வமான தகவல் தொடர்புக்கு வழி வகுக்கும்.

மன அழுத்த நிவாரணம்: கையால் எழுதும்போது அது ஒரு தியானத்தைப் போல கவனம் குவித்து செய்யப்படும் செயல். தன்னுடைய மன உணர்வுகளை மிகவும் நுணுக்கமாக வெளிப்படுத்த ஏதுவாகிறது. மனதிற்கு அமைதியையும் மன அழுத்தத்தை நீக்கவும் உதவுகிறது. பதற்றமும் மனசோர்வும் குறைந்துவிடும்.

நம்பகத்தன்மை மற்றும் தனித்துவம்: ஒவ்வொரு நபரின் கையெழுத்தும் தனித்துவமானது. கையால் எழுதப்படும் கடிதங்கள் தனித்துவத்தின் உண்மையான வெளிப்பாடாக மாறுகிறது. இந்த நம்பகத்தன்மையை டிஜிட்டல் செய்திகள் மூலம் பிரதிபலிக்க முடியாது. கையெழுத்து, பேனாவின் அழுத்தம், எழுத்தின் சாராம்சம் மற்றும் அதில் ஏற்படும் சின்ன தவறுகள் போன்ற நுணுக்கமான விஷயங்கள் தகவல் தொடர்புகளின் தனிப்பட்ட தன்மைக்கு வலு சேர்க்கின்றன.

வரலாற்று மற்றும் கலாசார முக்கியத்துவம்: முக்கியமான எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நிகழ்வுகளை பற்றி வெளிப்படுத்துவதற்கு பல நூற்றாண்டுகளாக கையால் எழுதப்பட்ட கடிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை நம்மை வரலாறு மற்றும் பாரம்பரியத்துடன் இணைக்கின்றன. கலாசார நடைமுறைகளை பாதுகாக்கின்றன.

கடிதங்கள் பெரும்பாலும் வரலாற்று ஆவணங்களாக மாறி கடந்த காலத்தில் தனி நபர்களின் வாழ்க்கை மற்றும் எண்ணங்களை பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது. தனிப்பட்ட மனிதர்கள் மற்றும் சமூக வரலாறுகளை புரிந்து கொள்வதற்கு அவை விலைமதிப்பற்ற ஆவணங்களாக விளங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
கிச்சன் கரப்பானுக்கு கெட் அவுட்; உடல் ஆரோக்கியத்துக்கு வெல்கம்!
கடிதம்

உறவுப் பிணைப்புகளை வலுப்படுத்துதல்: கையால் எழுதும் கடிதம் தனிப்பட்ட உறவுகளை வலுப்படுத்தும். அன்பு, கருணை, பாசம், காதல் போன்ற எல்லா உணர்வுகளையும் ஒன்று சேர்த்து வலுவான பிணைப்பை ஏற்படுத்துகிறது.

அர்ப்பணிப்பு உணர்வு: டிஜிட்டல்  முறையில் வார்த்தைகளை நீக்குவதும் எடிட்டிங் செய்வதும் எளிது. ஆனால், கையால் எழுதும்போது மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் எழுத வேண்டும். அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும் என்பதில் கவனம் வைக்க வேண்டும். வார்த்தைகள் மற்றும் எண்ணங்களுக்கான அர்ப்பணிப்பு உணர்வை கையெழுத்து ஊககுவிக்கிறது.

டிஜிட்டல் தகவல் தொடர்பு ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் கையால் எழுதப்பட்ட கடிதம் இன்றும் தனித்து நிற்கிறது. நன்றி குறிப்புகள், இரங்கல் செய்திகள் மற்றும் அழைப்பிதழ்கள் பெரும்பாலும் கையால் எழுதப்பட்டால் மிகவும் பாராட்டு பெறும். தொழில்துறை மற்றும் சமூக சூழ்நிலைகளில் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் இன்றும் மிகவும் மரியாதைக்குரியதாக கருதப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com