லைகர், டைக்லான் என்னன்னு தெரியுமா?

ஜூலை 29 – சர்வதேசப் புலிகள் தினம்!
லைகர், டைக்லான் என்னன்னு தெரியுமா?
gokulam strip
gokulam strip

2010ஆம் ஆண்டு, ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் நடைபெற்ற புலிகள் தொடர்பான உச்சிமாநாட்டில், ஜூலை 29ஆம் தேதியை சர்வதேசப் புலிகள் தினமாக அனுசரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. புலிகளின் வாழிடங்களை அதிகரிப்பதும் புலிகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் இந்த தினத்தின் நோக்கங்கள் ஆகும்.

இன்றைய தினத்தில், மிருகக் காட்சிசாலைகளில் புலிகளுக்குச் சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது. அங்கே புலிகளைப் பராமரிப்பவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் போன்றவற்றின் மூலம் புலிகளைக் காப்பதன் அவசியம் இன்றைய தினத்தில் வலியுறுத்தப்படுகிறது. நமது தேசிய விலங்கு என்பதால் நமக்குக் கூடுதல் பெருமை!

புலிகளைப் பற்றிய சில தகவல்கள்:

ற்போது உலகம் எங்கும் சுமார் 3,500 புலிகளே காடுகளில் எஞ்சி இருக்கின்றன. மிருகக் காட்சிசாலைகளில் இருப்பனவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், சுமார் 8,000 வரைஇருக்கலாம்.

திகப்படியாக 13 அடி நீளமும் 320 கிலோ வரை எடையும் இருக்கும். சராசரியாக நாளொன்றுக்கு 30 கி.மீ. தூரம் நீந்தும் திறன் கொண்டது. சுமார் 25 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

ணிக்கு 60 கி.மீ. வேகம் வரையிலும் ஓடக்கூடியது. 6 மீட்டர் நீளம் தாவிப் பாயும். செங்குத்தாக 5 மீட்டர் உயரத்துக்கு எட்டிக் குதிக்கும்.

மிருகக் காட்சிசாலைகளில், ஆண் சிங்கத்துக்கும் பெண் புலிக்கும் பிறந்த குட்டி, லைகர் எனப்படும். பெண் சிங்கமும், ஆண் புலியும் கூடிக் குட்டி போட்டால் அதை டைக்லான் என்பார்கள்.

காட்டில் சிறுத்தைகளுடன் சேர்ந்தும் குட்டி போடுவதுண்டு. புலியின் வரிகளும், சிறுத்தையின் புள்ளிகளும் சேர்ந்து அந்தக் குட்டிகளின் உடலில் தென்படும்.

புலிகள் மனிதர்களை விட ஆறு மடங்கு கூர்மையான கண் பார்வை கொண்டவை. ஒவ்வொரு புலியின் மீதுள்ள கோடுகளும், மனிதரின் கைரேகை போலத் தனித்துவம் வாய்ந்தன ஆகும்.

ங்களுகான எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதற்குள்ளேதான் வசிக்கும். எல்லைகளை அடையாளப்படுத்த அங்கே சிறுநீர் கழித்தும், மரங்களின் பட்டைகளை நகங்களால் கீறியும் வைக்கும்.

ரை கிடைத்தால், பெண் புலிகள் மற்றும் குட்டிகள் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்து, பின்னர்தான் ஆண் புலி சாப்பிடும்.

ரு வருடத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களே கரு உருவாகும் காலம். மூன்று மாதங்களுக்குச் சற்றே கூடுதலாகக் கர்ப்ப காலம் உள்ளவை. ஒரு பிரசவத்தில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் போடும்.

றைவில் இருந்து திடீரெனெத் தாக்கும் இயல்புடையவை. வழக்கமான இரை கிடைக்காதபோது மட்டும்தான் மனிதர்களைத் தாக்கும் ஆட்கொல்லியாக மாறும்.

தர மிருகங்களின் குரல் போலவே ஒலி எழுப்பி, அவற்றை அருகில் வரவழைத்து வேட்டையாடும். இரையின் கழுத்தைக் குதறிச் சாகடிக்கும்.

ழுத்துப் பக்கத்தில் கெட்டியான தசைகள் உள்ள முதலையைத் தாக்கும்போது அதன் வயிற்றைக் கிழித்துக் கொல்லும். பற்களைப் போலவே நகங்களும் கொல்லும் ஆயுதங்களாகப் பயன்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com