பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; செல்போனில் பதிவிறக்கம் செய்யலாம்!

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; செல்போனில் பதிவிறக்கம் செய்யலாம்!

இந்த ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்;

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி காகிதமில்லா முறையில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

கைபேசி செயலியில் பட்ஜெட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை அரசியல் சாசனத்தின் பரிந்துரைத்துள்ளபடி முழுமையாக பார்வையிடலாம். ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அந்த பட்ஜெட்டில் செல்போன், கணினி உபரி பாகங்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆடியோ பொருள்கள், ஸ்மார்ட் வாட்சுகள், பேண்டுகள் உள்ளிட்ட பொருள்களின் மீதான சுங்கவரி குறைக்கப்படலாம் என்றும், அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com