தயிர் சாதம் நைவேத்தியம்
தேவையான பொருட்கள்:
அரிசி -1கப்
பால் - 1/2 லிட்டர்
தயிர்- 1 கரண்டி
உப்பு 1 ஸ்பூன்
கடுகு-1ஸ்பூன்
துருவிய இஞ்சி -2ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
மாதுளைமுத்து - 4 ஸ்பூன்
நெய் -தேவையான அளவு
முந்திரி - 4
கருவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை :
சாதத்தை நன்றாக குழைய வேக வைத்துக்கொள்ளவும். சாதம் ஆறியதும் உப்பு, இஞ்சி, தயிர், பால் கருவேப்பிலை
கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணை விட்டு கடுகு , பச்சை மிளகாய் தாளிக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து போட்டு மாதுளை முத்தை போட்டு எடுத்து வைக்கவும்.
வேர்க்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை -1 கப்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயத்தூள்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி கருவேப்பிலை
இட்லி மிளகாய் பொடி
செய்முறை :
வேர்க்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் . மறுநாள் அதை களைந்து உப்பு போட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் போட்டு சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் போட்டு வெந்த வேர்க்கடலையை அதில் போட்டு இட்லி மிளகாய் பொடியை தூவி மல்லி கருவேப்பிலை சேர்த்து நெய் விட்டு கிளறி இறக்கவும்.