‘வந்தே மாதரம்’  வீரியத்துடன் ‘1770’ படம்! 

‘வந்தே மாதரம்’  வீரியத்துடன் ‘1770’ படம்! 
Published on

–லதானந்த் 

பிரபல வங்காள எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'ஆனந்த மடம்' நாவலைத் தழுவி தயாராகிறது '1770' என்ற திரைப்படம். 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான '1770' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை, பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளரான அஷ்வின் கங்கராஜு இயக்குகிறார். 

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வங்காள நாவலான 'ஆனந்த மடம்' நாவலைத் தழுவி, '1770' எனும் பெயரில் இந்த  திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த படத்தை எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளரும், 'ஆகாஷ்வாணி' எனும் படத்தை இயக்கிய இயக்குநருமான அஸ்வின் கங்கராஜு இயக்குகிறார். 

'1770' படத்தைப் பற்றி இயக்குநர் அஸ்வின் கங்கராஜு பேசியதாவது; 

"இந்தப் படத்தின் தலைப்பு எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இந்தியாவின் பிரபலமான கதாசிரியர் வி. விஜயேந்திர பிரசாத் இப்படத்தின் திரைக்கதையை எழுதி எளிமைப்படுத்தியதால், எனக்கு இயக்க சுலபமாக இருந்தது. இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படைப்பாக உருவாகும் என நம்புகிறேன்'' என்ற வர தொடர்ந்தார்.. 

''வந்தே மாதரம்' என்ற வீர்யமிக்க பாடல் பிறந்து 150 ஆண்டுகள் ஆகிறது.  இந்த 'வந்தே மாதரம்'  கவிதை பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' நாவலில்தான் முதன் முதலாக இடம் பெற்றது. வீரியமிக்க தேச உணர்வைத் தூண்டும் இந்தக் கவிதை ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்தது" என்றார். 

படத்தைப்பற்றிக் கதாசிரியர் வி.விஜேந்திர பிரசாத் பேசுகையில்,"வந்தே மாதரம்' என்பது மந்திர வார்த்தை என நான் உணர்கிறேன். கொடுங்கோன்மை மற்றும் அநீதிக்கு எதிராக தேசம் ஒன்றுபட மகரிஷி பக்கிம் சந்திர சட்டர்ஜி வழங்கிய மந்திர சொல் அது. அதனை நாங்கள் '1770' படத்தில் கையாண்டிருக்கிறோம். அத்துடன் சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட முகம் அறியாத வீரர்களின் கதையுடன் இதனை இணைந்திருக்கிறோம்" என்றார். 

'1770' திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் உருவாகவிருக்கிறது. நவராத்திரி திருவிழா தொடங்குவதற்கு முன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது இப்படம் பற்றிய விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com