கல்விக் கண்களைத் திறந்த மாபெரும் தலைவர்!

ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள்!
காமராஜர்...
காமராஜர்...
Published on

நிறம் மாறாத நிஜமான வீரர்’ என்றவுடன் நினைவில் வருபவர் காமராஜரே. நம் நாட்டிற்கு திறமை வாய்ந்த பல மன்னர்களை உருவாக்கிய ‘கிங் மேக்கர்’. 

லால் பகதூர் சாஸ்திரி மறைந்ததும், அதுல்யா கோஷ், காமராஜரை பிரதம மந்திரியாக பதவி வகிக்க ஆலோசனை கூறுகையில், கண்ணியமாக மறுத்து அரசியலில் மகரிஷியானவர்.

பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட. ரேஷன் அரிசியை சுமார் ஆறு ஆண்டு காலம் சாப்பிட்ட இவர், எளிமையான மக்களின் தொண்டர்.

முதலமைச்சர் என்ற பந்தா இல்லாமல், பொது வாழ்வில் தன்னையே ஐக்கியப்படுத்திக்கொண்டதோடு, மக்கள் நலனிற்காக, அரசின் ஆணைகளில் மாற்றம் கொண்டுவந்த சிறந்த தலைவர்.

சாதியினம் பார்க்காமல்,அனைவருக்கும் தீபஸ்தம்பம் மாதிரி ஒளி கொடுத்து கல்விக் கண்ணைத் திறந்ததோடு, இலவச கல்வியினை அறிமுகப்படுத்திய படிக்காத மேதை.

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வயிறார சாப்பிட்டு படிக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில், மதிய உணவு திட்டம் ஏற்படுத்தி, பசிக்கு உணவளித்த வள்ளல்.

சொத்து சுகம் சேர்க்காமல்,பொதுவாழ்வினை மணந்து, அறவழியில் சென்று, இந்திய மண்ணிற்காக தொண்டாற்றிய ‘பாரத ரத்னா’ – ‘கர்ம வீரர்’.

கட்சியில் முழுநேரப்பணி செய்ய, முதல்வர் பதவியைத் தானாகவே முன்வந்து ராஜினாமா செய்து பிணைத்துக் கொண்ட காரணம், ‘கே பிளான்’ என இந்திய வரலாற்றில் இடம் பெற்றது.

இதையும் படியுங்கள்:
சுயமரியாதையோடு வாழ்வதே சுகவாழ்வு!
காமராஜர்...

வெண்மையான வேட்டி-சட்டை அணிந்து ரஷ்யா வரை சென்று வந்தவர். கடைசிக் காலம் வரை கையில் கடிகாரமும், சட்டைப்பையில் பேனாவும் இன்றி வாழ்ந்த மகான்.

எளிமையை உடையிலும், தூய்மையை மனதிலும், நேர்மையை செயலிலும் கொண்டு நிறம் மாறாமல் மக்கள் மனதில் என்றும் வாழ்பவர். இந்த நிஜமான வீரரை போற்றி வணங்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com