வெறிப்பிடித்துள்ள நாய்களிடமிருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும்?

Dog Bite
Dog Bite

சென்னை நகரில் உள்ள ராயபுரத்தில் வெறிபிடித்த தெரு நாய் ஒன்று அப்பகுதியில் இருந்த 29 நபர்களை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், வெறிப்பிடித்த அந்த நாயை ஆறு அறிவுக்கொண்ட மனிதர்கள் கல்லால் அடித்த கொன்றதுதான்.

இந்த நிகழ்வுக்கு பிறகு நாய்கள் குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தெரு நாய்க்கள் கண்டாலே மக்கள் பயப்படத் தொடங்கியுள்ளனர். சமீப காலமாக சென்னை போன்ற பெருநகர சாலைகளில் சுற்றித் திரியும் மாடு, நாய் போன்றவை மக்களை முட்டி தள்ளுவதும், துறத்துவதும் மற்றும் கடிப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருவதுபோல், சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய், பூனை, எலி போன்ற விலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மாநகராட்சி போன்ற அரசு அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுபோல் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு கருத்தடை சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கண்கூட காண முடிகிறது.

மேலும், மாறியுள்ள உணவு பழக்க வழக்கங்கள் மனிதர்களுடைய உடல் அமைப்பு, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்திருப்பதுபோல், குப்பை கழிவுகளில் இருந்து பெரும்பாலும் உணவுகளை எடுத்துக்கொள்ளும் தெரு நாய்க்கள், பூனைகள் மற்றும் மாடுகள் போன்ற விலங்குகளின் ஆரோக்கியத்திலும் கேடு விளைவித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் 29 பேரை வெறிப்பிடித்த நாய் கடித்த நிகழ்வும், அதனைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பிரபல கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் பிரியதர்ஷினி கோவிந்த் கூறுகையில், ”வெறிப்பிடித்த நாய் ஒன்று 29 பேரை கடித்த நிகழ்வு வருத்தப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், ஒரு ஜீவனை மனிதர்கள் மிக மோசமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம்தான் என்னைப்போன்ற கால்நடை மருத்துவர்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

veterinary Dr. Priya
veterinary Dr. Priya

இதுபோன்ற மனிததன்மையற்ற செயல்களுக்கு பதில், வெறிப்பிடித்த நாயை ஒரு போர்வை கொண்டு பிடித்து, கட்டிப்போட்டு மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் அளித்திருக்கலாம். அவர்கள் அந்த வெறிப்பிடித்த நாயை கன்னியமான முறையில் Mercy Killing செய்திருப்பார்கள்” என முதலில் தன்னுடைய வருத்தம் கலந்த கண்டனத்தை பகிர்ந்துக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பிரபல கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் பிரியதர்ஷினி கோவிந்த், பொதுவாக நாய்களுக்கு எந்த காரணத்தினால் வெறிப்பிடிக்கிறது என்பது ஆராயப்பட்டு வருகிறது. வெறிநாய்க்கடி நோய் அல்லது ரேபீஸ் நோய் (Rabies) என்பது மனிதர், விலங்குகளுக்கு இறப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான நோய்க்காரணிகளுள் ஒன்றாகும்.

DOG BITE
DOG BITE

உயிரிழப்பை ஏற்படுத்தகூடிய ரேபீஸ் வைரஸ் (rabies virus), விலங்குகளுக்கு ஏற்படும் மூளையழற்சி நோய் ஆகும். பாதிக்கப்பட்ட நாய் மற்றும் விலங்குகளின் கடியால் பரவும் ஒரு தொற்றுநோய் ஆகும்.

நாய்களுக்கு ரேபீஸ் தொற்று எவ்வாறு ஏற்படும்?

மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவியதுபோல், ரேபீஸ் என்ற வைரஸ் ஒரு நாயிடமிருந்து மற்றொரு நாய்க்கு எச்சில் மூலம் அல்லது நோய் பாதித்த நாய் மற்றொரு நாயை கடிக்கும்போது பரவு தன்மை கொண்டது. இந்த ரேபீஸ் வைரசால் பாதிக்கப்பட்ட தெரு நாய் அல்லது வீட்டில் வளர்க்கப்படும் நாயின் பழக்க வழக்கம் முன்பு இருந்ததுபோல் இருக்காது.

நாம் வளர்க்கும் நாயாக இருந்தாலும் அல்லது சாலைகளில் உள்ள நாய்களுக்கு தினமும் உணவு அளிக்கும் நபர் என நாய்களிடம் அன்பு செலுத்தும் நபர்கள் நிச்சயமாக இந்த விஷயத்தை செய்யவேண்டும்.

நீங்கள் வளர்க்கும் நாய்க்கு நான்கரை மாதம் இருக்கும்போது ரேபீஸ் நோய் தொற்றை தடுக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 18 மாதங்களுக்கு ஒரு முறை நிச்சயமாக இந்த தடுப்பூசி நாய்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கவேண்டும். அதேபோல் நாய் வளர்ப்போர் மற்றும் நாய் பராமரிப்பாளர் Prophylactic vaccines என்ற தடுப்பூசி செலுத்திக் கொள்வது மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.

இவ்வாறு தடுப்பூசி செலுத்துவதினால், ரேபீஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாயிடமிருந்து தடுப்பூசி போடப்பட்ட நாய்க்கு நோய் தொற்று பரவுவது தடுக்கப்படும். இதனால், மனிதர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கலாம்.

ரேபீஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாயை எவ்வாறு கண்டறிவது?

பொதுவாக ரேபீஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்கள் இரண்டு வகைகள் உண்டு.

முதல் வகை: சமீபத்தில் மனிதர்களை கடித்த நாயின் செயல்பாடு போல் இருக்கும். அதாவது தன்னுடைய அருகில் வரும் நபரை பார்த்து தொடர்ந்து குரைப்பது, துரத்தி செல்வது மற்றும் கடிப்பது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ரேபீஸ் தொற்று பாதிக்கப்பட்ட நாய்க்கு, தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. உதாரணமான மனநிலை பாதிக்கப்பட்ட மனிதன் ஆக்ரோஷமான நேரத்தில் எப்படி செயல்படுவார்களோ அதேபோல்தான், ரேபீஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்க்கு அது என்ன செய்கிறது என்றே புரியாது.

இரண்டாவது வகை: இந்த இரண்டாவது வகைதான் நாம் மிகவும் முக்கியமாக கவனிக்கவேண்டிய நாய். ரேபீஸ் தொற்று ஏற்பட்ட இந்த வகையான நாய்கள் மிகவும் அமைதியாக இருக்கும். எப்போதும் இருட்டான இடத்திலேயே படுத்திருக்கும். சாப்பாடு, தண்ணீர் எதுவும் குடிக்காது. அதனுடைய பழக்க வழக்கம் எப்போது, எப்படி இருக்கும் என உறுதியாக கூறமுடியாது. இதுபோன்ற நாய்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

ரேபீஸ் நோய் தொற்றை குணப்படுத்த முடியாது. இதனால், இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளான நாயை தனிமைப்படுத்துவது அல்லது அரசு வழிகாட்டுதல் முறையில் Mercy Killing செய்துவதான் தற்போதைய நடைமுறையாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com