இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கரூர் டாக்டர் போக்சோ சட்டத்தில் கைது!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: கரூர் டாக்டர் போக்சோ சட்டத்தில் கைது!

Published on

கரூரில் 17 வயது இளம்பெண்ணுக்கு பிரபல மருத்துவமனை மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரையடுத்து அம்மருத்துவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர் பசுபதிபாளையம் பகுதியிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் கேஷியராக வேலைபார்க்கும் பெண் ஒருவர், அந்த மருத்துவமனையின் மருத்துவரான ரஜினிகாந்த் என்பவர் தன் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக நேற்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்.

அப்புகாரில் அநத பெண் தெரிவித்ததாவது:

என் மகள் கரூரில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் எலும்புமுறிவுத்துறை மருத்துவரான ரஜினிகாந்த் நேற்று மாலை என் மகளை தனது அறைக்கு வரச்சொல்லி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இவ்வாறு அவர் புகாரளித்ததை தொடர்ந்து, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தூர்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதையடுத்து
மருத்துவர் ரஜினிகாந்த், மற்றும் மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

ஏற்கனவே கோவை பள்ளிச் சிறுமி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் கரூரில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

logo
Kalki Online
kalkionline.com