இராணுவ வீரன்!

இராணுவ வீரன்!
Updated on

ராதிகா ரவீந்திரன், திருவான்மியூர்.

காஷ்மீர் எல்லையில் காவல்
காத்து நிற்கையில்
கண்முன் குடும்பம் தெரியுதே!
கண்ணீர் தான் பெருகுதே!
மனைவியை நினைக்கையில்
மனசு கிடந்து ஏங்குதே!
குழந்தையைக் கொஞ்ச
நெஞ்சந்தான் துடிக்குதே!
பெற்ற தாயின் பரிதவிப்பு
தடுமாற வைக்கிறதே!
அத்தனையும் மறைந்தது அடுத்த நொடியிலே!
கடமைக்கு முன்னே பாசம் தோற்றது!
கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணிவெடி வெடித்ததில்
பகைவனை அழித்து பாரதத்தைக் காத்திட
தன்னுயிரை தந்து நம் உயிரைக் காத்த வீரன்!
அவன் உடல் மண்ணிலே! அவன் புகழோ விண்ணிலே

logo
Kalki Online
kalkionline.com