இரும்பு சத்து குறைவாக இருக்கின்றதா? பெண்களே கவனம் !

இரும்பு சத்து குறைவு
இரும்பு சத்து குறைவு

பொதுவாக பெண்களுக்கு இரும்பு சத்து மிக மிக அவசியம். மிகவும் சோர்வாகத் தெரிந்தால் மாடி ஏறினால் சீக்கிரம் மூச்சு வாங்கினால் உங்களுக்கு இரும்பு சத்து குறைவாக இருக்கின்றதா? என்று ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பெண்களாய் இருந்தால் இது மிகவும் கட்டாயம் . இரும்புசத்தே ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்றது.

ஒருவரது வயது மற்றும் ஆண், பெண், ஒருவரது உடல்நிலையை பொறுத்து இரும்பு சத்து தேவைப்படுகின்றது. குழந்தைகளுக்கு பெரியவர்களை விட அதிக இரும்பு சத்து தேவைப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் வேகமாக வளரும் பருவத்தில்இருக்கின்றனர். 4, 8 வயது வரை 10 மி.கி. இரும்பு சத்து அன்றாடம் அவசியம்.

இரும்பு சத்து
இரும்பு சத்து

9 முதல் 13 வயது வரை 8 மி.கி. அளவாவது தேவை. பெண்களுக்கு 50 வயதுவரை தினம் 18 மி.கி. இரும்பு சத்து தேவை. ஏனெனில் மாத விடாய் காலத்தில்அவர்களுக்கு ரத்த இழப்பு ஏற்படுகின்றது. ஆனால் ஆண்களுக்கு இந்த வயதில் தினம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. பெண்களுக்கு மாத விடாய் நின்றபிறகு அன்றாடம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. உணவிலிருந்தோ அல்லது ஊட்டசத்திலிருந்தோ ஒருவர் இரும்பு சத்தை பெற முடியும்.

ரத்த சிவப்பணுவில் உள்ள முக்கியமான பொருள் இதுவே. ரத்த சிவப்பணுஎண்ணிக்கை குறையும் பொழுது இரும்பு சத்து குறைவது ரத்த சோகை எனப்படும். தேவையான அளவு சிவப்பணுக்கள் இல்லாவிட்டால் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காது. தேவையான ஆக்ஸிஜன் இல்லாத போது உடல்சோர்வாகும்.

உலர்ந்த பழங்கள்
உலர்ந்த பழங்கள்

இரும்பு சத்து குறைவினால் மூளை சோர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படும். கர்ப்ப காலத்தில் ரத்தசோகை அதிகமாகும். இதனால் குழந்தை சிறிய அளவிலோ அல்லது உரியகாலத்திற்கு முன்பாகவோ பிறக்கலாம். இரும்பு சத்து திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சருமம், முடி, நகம் இவை நன்கு பராமரிக்கப்படுவதற்கும் அவசியமானது.

எனவே, பெண்கள் இரும்பு சத்து அதிகமான உணவினை உட்கொள்ளவதின் மூலம் இக்குறைபாட்டினை சரி செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com