ஜனவரி 4 உலக ஹிப்னாடிசம் தினம்: உண்மையில் ஒருவரை ஹிப்னாடிசம் செய்யமுடியுமா?

Jan 4 World hypnosis day
Jan 4 World hypnosis day

ஹிப்னாடிசம் என்றால் என்ன? உண்மையிலேயே நம்மை யாராலாவது கட்டுப்படுத்த முடியுமா உலக ஹிப்னாடிசம் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

திரைப்படங்களில் வருவது போல இது ஒரு மாயாஜால வித்தை அல்ல. திரைப்படங்கள் உருவாக்கிய மாயை தான் இவை. ஒருவருடைய அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் அவரை ஹிப்னாட்டிஸ் செய்யவே முடியாது. இங்கு சினிமாக்களும் நாவல்களும் இதைப்பற்றி ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தி உள்ளது. சுவாரசியத்திற்காக கற்பனைகளை அதிகம் சேர்த்து தந்துள்ளது.

world hypnotism day 2024
world hypnotism day 2024

ஒரு விஷயத்தை செய்ய விரும்பி அது அவர்களால் முடியவில்லை என்று வரும்போது(சிகரெட் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை) சிகிச்சை அளித்து குணப்படுத்த உதவும். ஹிப்னாடிசம் மூலம் சில தீய பழக்கங்களிருந்து வெளிவர முடியும். பயம், கவலை, கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும். ஆனால் இதற்கு சம்பந்தப்பட்டவரின் ஒத்துழைப்பும் அனுமதியும் மிகவும் அவசியம். அவசியம் மட்டுமல்ல முக்கியமும்கூட.

ஹிப்னாடிசம் என்ற சொல்லிற்கு தமிழில் 'நோக்கு வர்மம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்னாடிசம் என்பது விழிப்புணர்வுடன் கூடிய உறக்க நிலைக்கு கொண்டு செல்லும் முறை. இந்த உறக்க நிலையில் ஆழ்மனதில் உள்ள எதிர்மறையான எண்ணங்களை, தவறான பழக்க வழக்கங்களை மாற்றி தீர்வு காண முடியும்.

ஹிப்னடைஸ் என்பது ஒருவரின் மூளையை முழுவதுமாக கட்டுப்படுத்துவது கிடையாது. பதட்டம் அல்லது சஞ்சலமான நிலையில் இருக்கும் ஒருவரின் மனதை ஆசுவாசப்படுத்தி அதை ஓய்வு நிலைக்கு கொண்டு வந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் தான் ஹிப்னடைஸ் செய்வது என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com