
மதுரையில் பிஜேபி சார்பில் ஜனவரி 12-ம் தேதி நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தைத்திருநாளான ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாஜக சார்பில் மதுரையில் ஜனவரி 12=ம் தேதி 'மோடி பொங்கல்' என்ற நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை வரவிருக்கிறார். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்த மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
–இவ்வாறு தமிழக பிஜேபி மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார்.