ஜனவரி 5-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்: கோட்டையில் நடைபெறும்!

ஜனவரி 5-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்: கோட்டையில் நடைபெறும்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

புத்தாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5-ம் தேதி கோட்டையில் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்ததாவது:

கொரோனா பரவல் காரணமாக கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், 2022-ம் ஆண்டின் முதல் பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் இந்தமுறை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்காக பேரவையில் தொடுதிரை கணினிகள் அமைக்கப் பட்டு வருகிறது.

இவ்வாறு தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com