
நம்பிக்கையின் வடிவம், தோல்விகளில் தோளாய் இருப்பவன் என் அப்பா. இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்!
கண்களில் கனவுகளையும், கலங்காத மனசும் சாயாத நம்பிக்கையையும் கொடுத்தவன் என் அப்பா. இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்!
வார்த்தைகளே இல்லாமல், பாசம் காட்டும் ஒரே உயிர் — நீங்கள் தான். இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்!
உங்கள் அரவணைப்பில் பாதுகாப்பாக உணரும், தாங்கள் ஈன்றெடுத்த மகளின் அன்பான தந்தையர் தின வாழ்த்துகள்.!
தினந்தோறும் கொண்டாடப்படும் மாந்தர்களுக்கு ஒருநாள் வாழ்த்துக் கூறுவது மிகையாகுமோ!- இப்படிக்கு அன்பின் வாழ்த்தைப் பரிமாறிக் கொள்ள விரும்பும் அன்பினி.
பாதையறியா வாழ்வின் வழிகாட்டி
வழுவிழந்த கைகளின் நம்பிக்கையின் கோல்!
தலைமை பாரம் சுமக்கும் சுமைத் தாங்கி!
அப்பா
தாங்கிட தோழனாய்!
அணைத்திட தாயாய்!
வழிகாட்டும் தீபமாய்!
மகளுக்கு அஞ்சியவனாய்!
மகனுக்கு நண்பனாய்!
தாரத்திற்குத் துணையாய்!
விளங்கும் அன்பின் உருவம்... அப்பா!
அப்பா… என் கனவுக்கா நிஜம்
நான் நினைத்த பொருளை சொல்லும் முன்…
அதை உணர்ந்து பரிசாய் கொடுப்பாய்
அம்மா இது இப்ப தேவையா? என்ற விழின் கேள்விக்கு, நீ கொடுக்கும் பதில்:
இது என் பிள்ளையின் சிரிப்புக்கு இடம் ஆகுமா?
நான் சிரிக்கும்போது அதை கண்தட்டாமல் பார்த்து நீங்கள் இமைக்கும் திடீரனும் மறந்துவிடுவாய்.
உன்னைப் போலவே…
பெற்றது தாயாகவே இருந்தாலும்
வளர்த்தது நீ , உன் உயிராக,
நிழலாக நானும் உருவானேன்,
உன் வார்த்தைகளில் நானும் வாழ்ந்தேன்.
உன் சிரிப்பில் என் நாள்கள்
உன்னுடைய பிரதிபலிப்பான நான்,
எப்படி உன்னை விட்டு விலக முடியும்?
எந்த ஒரு உயிரினமும், தன் தாய்க்கு பிறகு முழுமையாக நம்பும் ஒரே உறவு தான் – அப்பா.
அப்பா என்னை நெருங்கும் ஆபத்துகளில் இருந்து
முதலில் ஓடி வந்து என்னை காத்து,
சொல்லாமல் செய்பவனாக,
நித்தம் நிழலாக என்னைக் காக்கும்
ஹீரோ அவர் தான் — என் அப்பா.