தங்கம் விலை தொடர்ந்து உயர்வு; ஒரு சவரன் தங்கம் ரூ 39 ஆயிரத்தை நெருங்கியது!

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு; ஒரு சவரன் தங்கம் ரூ 39 ஆயிரத்தை நெருங்கியது!
Published on

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நடப்பதையடுத்து, இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. பின்னர் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை கடந்த சனிக்கிழமை (மார்ச் 26) சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் 38,752 ரூ-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 28) சவரனுக்கு 224 குறைந்து ஒரு சவரன் 38,608 ரூபாய்க்கும், செவ்வாயன்று ரூ.38,344-க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 448 குறைந்ததால், தங்கம் வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை சற்று உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.38,344க்கு விற்பனையானது.

இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்து உச்சத்தை எட்டியது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,834க்கும், ஒரு சவரன் ரூ.38,672க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.50-க்கு விற்பனையான நிலையில் இன்று 0.20 காசுகள் அதிகரித்து ரூ. 71.70-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com