கொரோனா பரவல் அதிகரிப்பு:  ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலர் கடிதம்!

கொரோனா பரவல் அதிகரிப்பு:  ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலர் கடிதம்!

Published on

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.  

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது:

தமிழகத்தில் ஒரு சில நாட்களாக சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

அடுத்த சில வாரங்கள் மிகவும் கவனத்துடன் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியம். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி நிலவரப்படி நாள் ஒன்றுக்கு 22-ஆக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 100 ஆக பதிவாகி வருகிறது.

அதாவது நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலை அடுத்து வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை அவசியம்.

-இவ்வாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

logo
Kalki Online
kalkionline.com