பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் போட்டி; ரபேல் நடால் அரையிறுதிக்கு தேர்வு!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் போட்டி; ரபேல் நடால் அரையிறுதிக்கு தேர்வு!
Updated on

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் போட்டித் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை தோற்கடித்து ஸ்பெயினின் ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.இதுவரை 13 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற ரஃபேல் நடால் , நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் இடையிலான காலிறுதி ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் நடால் கைப்பற்றினார். அடுத்த செட்டில் ஜோகோவிச், 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து மூன்றாவது செட்டில்  6-2 என்ற கணக்கில் நடால் வென்றார்.

அதையடுத்து நான்காவது செட் ஆட்டம் அனல் பறந்தது. இருவரும் சளைக்காமல் விளையாடி, கடுமையான போராட்டத்திற்கு பின்னர் 7-6 எனக் செட்டைக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார் நடால். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 4 மணி நேரம் 12 நிமிடங்கள் நீடித்தது.

இதையடுத்து அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவை எதிர்த்து ரபேல் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com