இன்று தேசிய மருத்துவர்கள் மற்றும் பட்டய கணக்காளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தன் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரபல மருத்துவரும் மேற்குவங்க முன்னாள் முதல்வருமான பிதான் சந்திர ராயின் பிறந்த நாள் மற்றும் மறைவு நாளான ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடி தன் டிவிட்ட்ர பக்கத்தில் பதிவிட்டதாவது:
நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் இன்று மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆண்டுதோறும் ஜூலை 1 பட்டய கணக்காளர் தினமாகவும் கொண்டாடப் படுகிறது. இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் அமைப்பதற்கான சட்டம், 1949-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த தினத்தில் கொண்டு வரப்பட்டது.
அந்த வகையில் பட்டயக் கணக்காளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் ட்விட்டரில் பதிவிட்டதாவது;
நமது நாட்டின் பொருளாதாரத்தில் பட்டய கணக்காளர்களின் பங்கு மகத்தானது. இந்த நாளில் அனைத்து பட்டய கணக்காளர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார வெளிப்படைத் தன்மைக்கும் உங்களின் உழைப்பு தொடரட்டும்.
-இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.