70 லட்சம் பேர்; ஒரே நாளில் வருமானவரி கணக்கு தாக்கல்!

70 லட்சம் பேர்; ஒரே நாளில் வருமானவரி கணக்கு தாக்கல்!
Published on

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய கால அவகாசம் நேற்றுடன் (ஜூலை 31) நிறைவு பெற்ற வகையில் நேற்று ஒரே நாளில் 70 லட்சம் பேர் தங்களது வருமானவரி கணக்கை தாக்கல் செய்ததாக மத்திய வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து மத்திய வருமானவரித்துறை இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; 

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு வழக்கம் போல வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ம் தேதி நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் கடைசி ஒவ்வொரு மணி நேரத்திலும் 5 லட்சம் பேர் தாக்கல் செய்தனர்.மேலும் இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதி நாளான நேற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யதவர்களும் அபராதத்துடன் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். அந்த வகையில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் அபராதக் கட்டணமாக ரூ.5,000, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், தாமதக் கட்டணம் ரூ.1,000 செலுத்த வேண்டும்.

-இவ்வாறு மத்திய வருமானவரித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com