‘வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’: நடிகை ரோஜா சாதனை!

‘வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’: நடிகை ரோஜா சாதனை!

Published on

ஆந்திராவில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் அம்மாநில அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ரோஜாவை போட்டோ எடுத்ததன் மூலம்  'வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனை  புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் அமைச்சர் ரோஜா.

-இதுகுறித்து ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சகம் மற்றும் ரோஜா சார்பாகத் தெரிவித்ததாவது:

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை ரோஜா, இப்போது ஆந்திரா மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் விஜயவாடாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  'வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த நிகழ்ச்சி நடந்த தனியார் திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ரோஜா ஏறி நின்றார். அவரை சுற்றிலும் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நிற்கவைக்கப்பட்டனர். இதையடுத்து ஒரே சமயத்தில் 'ஒன் கிளிக் ஆன் சேம் டைம்' என்ற வகையில் 3 ஆயிரம் போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர். இதையடுத்து இந்த சாதனைக்காக  'வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் ரோஜா இடம்பிடித்தார். 

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com