பள்ளி பொதுத் தேர்வின்போது மின்சாரம் தடைபடாது: அமைச்சர் செந்தில் பாலாஜி!

பள்ளி பொதுத் தேர்வின்போது மின்சாரம் தடைபடாது: அமைச்சர் செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் 10 வகுப்பு மற்றும் ப்ளஸ்-டூ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வின்போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல ஊர்களில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள், எதிர்கட்சி தலைவர்கள் உட்பட பலரும் அரசை குற்றம்சாடினர்.

இந்நிலையில் தமிழகத்தில் இனி மின்வெட்டு ஏற்படாது எனவும் , அதற்குரிய நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 10 வகுப்பு மற்றும் ப்ளஸ்-டூ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வின்போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இதுகுறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் தமிழக மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிட்டதாவது:

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ்-டூ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும்போது, தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். பராமரிப்பு பணி காரணமாக பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது.

பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்து, பழுதடைந்திருந்தால் உடனடியாக அவற்றை மாற்ற வேண்டும்.

-இவ்வாறு தன் சுற்றறிக்கையில் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் (மே 5) முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com